For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்பா அவுட் கொடுத்த அவர்.. உலக கோப்பை பைனலுக்கு அம்பயராக நியமனம்.. புதிய சர்ச்சை

லண்டன் : உலக கோப்பை பைனலில் நடுவர்களாக, குமார் தர்மசேனா, எராஸ்மஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

Kumar dharmasena, marais erasmus appointed as umpires in world cup final

2 கட்டங்களாக நடைபெற்ற அரையிறுதியில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பைனலுக்கு முன்னேறின. இதையடுத்து நாளை லார்ட்ஸ் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையே பைனல் நடக்க இருக்கிறது.

இப்போட்டிக்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நியமித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

இங்கிலாந்து, ஆஸ்திரே லியா போட்டியின்போது நடுவர்களாக செயல்பட்ட இலங்கையின் குமார் தர்மசேனா, தென்னாப்பிரிக்காவின் எரஸ்மஸ் ஆகியோர் கள நடுவர்களாக செயல்படுவார்கள். போட்டியின் 3வது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதியில் ஜேசன் ராய்க்கு தவறான அவுட் கொடுத்தார் குமார் தர்ம சேனா என்ற சர்ச்சை எழுந்தது. இந்த சூழ்நிலையில், அவர் பைனல் போட்டிக்கு மீண்டும் நடுவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 13, 2019, 11:27 [IST]
Other articles published on Jul 13, 2019
English summary
Kumar dharmasena, marais erasmus appointed as umpires in world cup final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+