Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரிடம் அதீத திறமை உள்ளது.. சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு ஆதரவு தந்த சங்ககாரா.. அப்படி என்ன ஸ்பெஷல்!

மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் விமர்சித்து வந்த இளம் வீரர் ரியான் பராக்கிற்கு குமார் சங்ககாரா ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.

ஷேன் வார்னேவுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் கனவு நிறைவேறாமல் போனது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ராஜஸ்தான் அணி தோல்வியை தாண்டி இளம் வீரர் ரியான் பராக்கின் மீது தான் அதிகப்படியான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதற்கு காரணம் களத்தில் அவர் நடந்துக்கொண்ட முறை. அவர் கேட்ச் பிடித்த உடனே பந்தைக் கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரி பார்த்துக் கொள்ளும்படி கிண்டல் செய்தார். இது பெரும் விமர்சனங்களை எழுப்பியது.

குவிந்த விமர்சனங்கள்

குவிந்த விமர்சனங்கள்

இதுமட்டுமல்லாமல் பீல்டிங் செய்யும்போது சீனியர் வீரர்களிடம் மரியாதை குறைவாக பேசுவார். தேவ்தத் பட்டிகலிடம் களத்திலேயே கத்தினார். மேலும் எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இவ்வளவு பில்டப் காட்டியும் அவர் போட்டியில் எதுவும் சாதிக்கவில்லை. 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 183 ரன்களை மட்டுமே அடித்தார்.

சங்ககாரா ஆதரவுக்குரல்

சங்ககாரா ஆதரவுக்குரல்

இந்நிலையில் ரியான் பராக்கிற்கு சங்ககாரா ஆதரவுக் கொடுத்துள்ளார்.

எதிர்வரும் சீசனில் ரியான் பராக்கை நம்.1 வீரராக தரம் உயர்த்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த சீசனில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். எங்களது அணியின் பேட்டிங் ஆர்டரில் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மையர் போன்றோர் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரியளவில் உதவவில்லை.

சாதித்து காட்டுவார்

சாதித்து காட்டுவார்

குறிப்பாக இந்த தொடரில் இளம் வீரர்கள் பராக் மற்றும் படிக்கல் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அவர்களது ஆதரவு போதுமான அளவில் இல்லை. அந்த வகையில் இனி ரியான் பராக்கின் பேட்டில் இருந்து அதிக ரன்கள் வரும். அவரிடம் பெரிய திறமை உள்ளது. டெத் ஓவரில் விளையாடும் வீரராக மட்டும் இல்லாமல் அவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றுவதற்கு எதிர்நோக்கி உள்ளேன் என சங்ககாரா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 31, 2022, 22:37 [IST]
Other articles published on May 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+