
பார்மை மீட்டார் தோனி
2019இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பழைய தோனியாக மாறியவர், அதிரடி காட்டி தன் பார்மை மீட்டார். இதனால், தோனி உலகக்கோப்பையில் உறுதியாக பங்கேற்பார் என ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

யாருக்கு இடம்?
இருந்தாலும், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது, யாருக்கு உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

அனுபவம் முக்கியம்
இது பற்றி சங்ககாரா கூறுகையில், உலகக்கோப்பை என்று வந்தால் அனுபவம் தான் முக்கியம். தோனி நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என கூறினார். தற்போது தோனி தான் இந்திய அணியில் மூத்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக உலகக்கோப்பை உட்பட பல தொடர்களை வென்று கொடுத்த அனுபவம் மிக்கவர்.

அமைதியானவர் வேண்டும்
மேலும், உலகக்கோப்பையில் மிகவும் கடினமான சூழ்நிலை வரும் போது, அனுபவத்துடன், அமைதியான ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என விராட் கோலி நினைப்பார் என கூறினார் சங்ககாரா.

வெற்றிக்கு காரணமானவர்
உண்மையில், தோனி பேட்டிங் செய்யாவிட்டால் கூட விக்கெட் கீப்பிங், கோலிக்கு ஆலோசனை கூறுவது, இளம் வீரர்களை வழி நடத்திச் செல்வது என பல வகைகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறார்.

தோனி நிச்சயம் உண்டு
சங்ககாரா கூறுவது போல தோனி நிச்சயம் உலகக்கோப்பையில் ஆடப் போகிறார். தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் ஒருவர் நிச்சயம் மாற்று விக்கெட் கீப்பராக உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications












