Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே டெஸ்டில் 424 ரன்கள் குவித்தும் உலக சாதனையை 33 ரன்களில் தவறவிட்ட குமார் சங்ககாரா!!

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 434 ரன்களை குவித்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா, ஒரே டெஸ்ட் போட்டியில் மூன்று சதம் மற்றும் மற்றொரு சதம் அடித்த 2 வது வீரர் என்ற பெருமையை மட்டும் பெற்றுள்ளார். இன்னும் 33 ரன்கள் எடுத்திருந்தால் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருப்பார் குமார் சங்ககாரா.

வங்கதேசத்தில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த அணியுடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று சதமடித்தார் குமார் சங்ககாரா. மொத்தம் 319 ரன்களை அவர் குவித்தார்.

2வது இன்னிங்ஸில் சங்ககாரா, 105 ரன்களைக் குவித்திருந்தார். மொத்தம் இந்த ஒரே டெஸ்ட் போட்டியில் 424 ரன்களைக் குவித்தார் சங்ககாரா.

கிரஹாம் கூச்

கிரஹாம் கூச்

இதற்கு முன்னர் கிரஹாம் கூச்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

456 ரன்கள் குவித்த கிரஹாம் கூச்

456 ரன்கள் குவித்த கிரஹாம் கூச்

இங்கிலாந்து அணியின் கிரஹாம் கூச், 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ரன்களையும் 2வது இன்னிங்ஸில் 123 ரன்களையும் (மொத்தம் 456) குவித்தார். அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்.

2வது இடத்தில் டெய்லர்

2வது இடத்தில் டெய்லர்

ஆஸ்திரேலியா அணியின் மார்க்ட் டெய்லர் 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 334 ரன்களையும் 2வது இன்னிங்ஸில் 92 ரன்களையும் (மொத்தம் 426) குவித்தார். 8 ரன்களில் சதத்தைக் கோட்டைவிட்டார்

குமார்சங்ககாரா அசத்தல்

குமார்சங்ககாரா அசத்தல்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 319 மற்றும் 105 ரன்களைக் குவித்துள்ளார் குமார் சங்ககாரா. இதன் மூலம் கிரஹாம் கூச்சுக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மூன்று சதமும் மற்றொரு இன்னிங்ஸில் மற்றொரு சதமும் அடித்த 2வது வீரர் என்ற பெருமைக்குரியவானார்.

Story first published: Saturday, February 8, 2014, 10:31 [IST]
Other articles published on Feb 8, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+