Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2023 - ஜார்க்கண்டில் இன்னொரு தோனி.. 17 வயதில் இமாலய சாதனை..கோடிகளை அள்ள போகும் விக்கெட் கீப்பர்

ராஞ்சி : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஜார்க்கண்ட் என்ற மாநிலத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வாங்கி தந்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்த தோனியை, நாட்டிற்கு கொடுத்தது ராஞ்சி தான்.

தோனி என்ற கேப்டன், தோனி என்ற பேட்ஸ்மேன், தோனி என்ற விக்கெட் கீப்பர் என்ற மூன்று பரிமாணங்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

யார் இந்த குஷாக்ரா?

யார் இந்த குஷாக்ரா?

தற்போது தோனியை போலவே, 17 வயதில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு கிடைத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தோனி இந்தியாவுக்காக விளையாடிய போது, ஒன்றரை மாத கைக் குழந்தையாக இருந்த குமாரா குஷாக்ரா என்ற நபர் தான், தற்போது ஐபிஎல் மினி ஏலத்தில் பேசும் பொருளாக மாறி போகிறார்.

உலக சாதனை

உலக சாதனை

2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப் பயத்தில் அண்டர் 19 இந்திய அணியில் குமாரா குஷாக்ரா இடம்பெற்று இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜார்க்கண்ட் ரஞ்சி அணியில் விளையாடிய குஷாக்ரா, தனது 17 வயதில், 266 ரன்களை விளாசி சாதனை படைத்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இளம் வயதில், அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற உலக அளவில் சாதனை குஷாக்ராவுக்கு சொந்தமானது. இதே போன்று தற்போது நடைபெற்ற ரஞ்சி தொடரிலும் கேரளாவுக்கு எதிராக 92 ரன்களை விளாசினார். கடந்த அக்டோபரில் 18 வயதை மட்டுமே எட்டியுள்ள அவர், உள்ளூர் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பி வருகிறார்.

ஐபிஎல் அணிகள் ஆர்வம்

ஐபிஎல் அணிகள் ஆர்வம்

தோனியை போலவே வலது கை பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் குமாரா குஷாக்ரா இருப்பதால், அவரை தங்களது அணியில் தேர்வு செய்ய ஐபிஎல் மினி ஏலத்தில் கடும் போட்டி நிகழ வாய்ப்பு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால், தோனியே சிஎஸ்கே வில் எடுக்க அறிவுறுத்தி இருக்கலாம்.

Story first published: Tuesday, December 20, 2022, 14:24 [IST]
Other articles published on Dec 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+