For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாமறிந்த கேப்டன்களிலே... அனில் கும்ப்ளேவிற்கு மகுடம் சூட்டிய கம்பீர்

டெல்லி : தான் விளையாடிய கேப்டன்களிலேயே அனில் கும்ப்ளே தான் சிறந்தவர் என்று முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

Recommended Video

Gautam Gambhir says Anil Kumble is the best captain

சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி ஆகிய கேப்டன்களுக்கு கீழேயும் தான் விளையாடியுள்ள போதிலும், அனில் கும்ப்ளே தான் சிறந்தவர் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிக நாட்கள் அனில் கும்ப்ளே கேப்டனாக இருக்காததை சுட்டிக் காட்டியுள்ள கம்பீர், அவர் இன்னும் அதிக காலங்கள் கேப்டனாக இருந்திருந்தால் அதிகப்படியான சாதனைகளை புரிந்திருப்பார் என்ற கூறியுள்ளார்.

14 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்

14 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்

இந்திய அணிக்காக தான் விளையாடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அனில் கும்ப்ளே, கடந்த 2007ல் ராகுல் டிராவிட்டிடமிருந்து கேப்டன் பொறுப்பை பெற்றார். அனில் கும்ப்ளே மொத்தமாக 14 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயலாற்றியுள்ளார். இதில் 3 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் 5 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன.

கவுதம் கம்பீர் பாராட்டு

கவுதம் கம்பீர் பாராட்டு

தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த 2008ல் எம்எஸ் தோனிக்கு அளித்தவர் கேப்டன் கும்ப்ளே. 3 வடிவங்களிலும் அந்த தருணத்தில் கேப்டன் பொறுப்பை தோனி பெற்றார். இந்நிலையில், தான் எம்எஸ் தோனி, சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்களின் கேப்டன்சியின் கீழ் விளையாடினாலும் அனில் கும்ப்ளேவே சிறந்த கேப்டன் என்று முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கும்ப்ளே கேப்டனாக நீடித்திருக்க வேண்டும்

கும்ப்ளே கேப்டனாக நீடித்திருக்க வேண்டும்

மொத்தமாக 14 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் அனில் கும்ப்ளே. இதனிடையே அவர் இன்னும் அதிக காலங்கள் கேப்டன் பொறுப்பை வகித்திருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் நீண்ட காலங்கள் கேப்டன் பதவியில் நீடித்திருந்தால் கேப்டன் பொறுப்பில் மேலும் பல சாதனைகளை படைத்திருப்பார் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

பிடித்தமான கேப்டன்

பிடித்தமான கேப்டன்

கேப்டன் பொறுப்பில் சாதனைகளை அதிகமாக படைத்து நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி என்று சுட்டிக் காட்டியுள்ள கவுதம் கம்பீர், ஆனால் தனது மனதுக்கு பிடித்தமான சிறந்த கேப்டன் அனில் கும்ப்ளே என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். அனில் கும்ப்ளேவிற்கு கீழ் 6 போட்டிகளில் கவுதம் கம்பீர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 22, 2020, 17:21 [IST]
Other articles published on Apr 22, 2020
English summary
Gautam Gambhir says Anil Kumble is the best captain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+