நல்ல ஸ்பின் இருக்கு.. திறமையும் இருக்கு.. அனுபவமும் இருக்கு.. வெற்றியும் நமக்கே.. கும்ப்ளே
Recommended Video

மும்பை: அனுபவம் வாய்ந்த இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் இந்திய வெற்றியில் பெரும் பங்கு வகிப்பார்கள் எனவும் கும்ப்ளே கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து தொடருக்காக புறப்பட்டுப் போயுள்ளது.
இந்தத் தொடர் எப்படி இருக்கும், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்பது குறித்து கும்ப்ளே பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரமாதமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

சிறந்த பந்து வீச்சாளர்கள்
இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சரியான பலத்துடன் இருக்கிறது. நமது பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்களை வீழ்த்தக் கூடியவர்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்பின் சூப்பர்
இங்கிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்ட அணியில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சராசரியாக இந்திய அணிவீரர்கள் அனைவரும் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் இங்கிலாந்து செல்வது இது முதல் முறை அல்ல. அங்குள்ள சீதோஷ்ண நிலை வீரர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.

உதவும் சீதோஷ்ணம்
கோடைகாலத்தின் இரண்டாவது பகுதியில் விளையாடுவது இந்திய அணி தொடரை வெல்ல உதவும். இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகிப்பதுடன் இங்கிலாந்து சீதோஷ்ண நிலை அவர்களுக்கு உதவும்.

யோ யோவை மதிப்போம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற தொடர்கள், வீரர்களின் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வர உதவுகிறது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் ஐபில் மற்றும் இந்திய தேசிய அணியில் இடம் பெற்றனர். கர்நாடக பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்தும் ஐபில் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். யோ யோ தேர்வு அணித்தேர்வு முறையில் ஒரு பகுதி. அதை அனைவரும் மதிக்க வேண்டும் என்றார் கும்ப்ளே.


Click it and Unblock the Notifications