Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்.: பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

அபுதாபி: 7வது ஐ.பி.எல். போட்டியில் தமது முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3வது லீக் போட்டி இன்று அபுதாபியில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக மெக்கல்லம், ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு அபாரமாக விளையாடினர்.

KXIP beat CSK by six wickets in IPL

ஸ்மித்..

ஸ்மித் 43 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்களைக் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும்.

மெக்கல்லம்

இதேபோல் மெக்கல்லமும் புயல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும்.

2விக்கெட் இழப்புக்கு 161

சென்னை அணி 123 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் 13வது ஓவரில் அவுட் ஆனார். அதன் பின்னர் ரெய்னாவும் ஸ்மித்தும் இணைந்தனர். ஆனால் 161 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித்தும் அவுட் ஆனார்.

நிலைக்காத ரெய்னா

பின்னர் ரெய்னாவுடன் கேப்டன் டோணி இணைந்து கொண்டார். ஆனால் ரெய்னா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இது ரெய்னாவின் 100வது ஐ.பி.எல். போட்டி.

20 ஓவர் முடிவில் 205/4 ரன்கள்

டோணியுடன் பிராவோ இணைந்து கொண்டார் . 20ஓவர் முடிவில் சென்னை அணி 205 ரன்கள் எடுத்த நிலையில் டோணியும் அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்து அபாரத்தை வெளிப்படுத்தியது. இதனால் [அஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பாலாஜி 2 விக்கெட்டுகள்..

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பாலாஜி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவானா, படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சோபிக்காத புஜாரா, சேவாக்..

பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக புஜாராவும் சேவாக்கும் களம் இறங்கினர். ஆனால் இருவரும் சோபிக்கவில்லை. புஜாரா 13, சேவாக் 19 ரன்களில் அவுட் ஆகினர்.

அபாரம் மாக்ஸ்வெல், மில்லர்

அதன் பினன்ர் வந்த மாக்ஸ்வெல் மற்றும் மில்லர் அபாரமாக ஆடினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துகளை இருவரும் நொறுக்கி தள்ளினர்.

மாக்ஸ்வெல் 95

மாக்ஸ்வெல் 43 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்களைக் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.

மில்லர் 54

மில்லர் 37 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன்களைக் குவித்தார். இதில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.

18.5 ஓவரில் இலக்கை எட்டிய பஞ்சாப்

இந்த அதிரடியால் 18.5 ஓவரில் வெற்றி இலக்கான 206 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்.

Story first published: Friday, April 18, 2014, 19:57 [IST]
Other articles published on Apr 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+