Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாபை ஒன்றுமில்லாமல் செய்தது... 8.1 ஓவர்களில் வென்றது பெங்களூர்... பிளே ஆப் வாய்ப்பை பெறுமா!

இந்தூர்: ஐபிஎல் போட்டியில் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது பெங்களூர் அணி. இதன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மேலும் இரண்டு அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை 11 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகியவை தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. மற்ற அணிகளுக்கு மேலும் 2 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் பஞ்சாப் அணிக்கு 3 ஆட்டங்கள் பாக்கி உள்ளன. அதனால் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற பஞ்சாபுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

ரிப்பீட்டு ஆகுமா

ரிப்பீட்டு ஆகுமா

பஞ்சாப், பெங்களூர் அணி கடந்த மாதம் 13ம் தேதி நடந்த ஆட்டத்தில் மோதின. அதில், பஞ்சாப் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதிர்ஷ்டம் அடிக்குமா

அதிர்ஷ்டம் அடிக்குமா

11 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் பெங்களூர் உள்ளது. அடுத்து விளையாடும் 3 ஆட்டங்களில் வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம். மற்ற அணிகள் மோசமாக விளையாடினால், ஏதாவது அதிசயம் நடந்தால், பெங்களூர் அணிக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கலாம்.

சுருண்டது பஞ்சாப்

சுருண்டது பஞ்சாப்

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. இந்தூரில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற பெங்களூர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 88 ரன்களுக்கு சுருண்டது. ஆரோன் பிஞ்ச் 26, ராகுல் 21, கிறிஸ் கெயில் 18 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் எடுத்தனர். பெங்களூரின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட மிகவும் குறைவான ஸ்கோர் இதுவாகும்.

பிளே ஆப் முன்னேறுமா

பிளே ஆப் முன்னேறுமா

பஞ்சாப் அணியை சுருட்டிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 89 ரன்கள் என்ற சுலப இலக்குடன் பேட்டிங் செய்தது. 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது. கோஹ்லி 48, பார்த்திவ் படேல் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம், பெங்களூர் அணியின் ரன்ரேட் விகிதம் உயர்ந்துள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களில் வென்றால், மற்ற அணிகளின் ஆட்டங்களில் மாற்றம் ஏற்பட்டால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெங்களூர் அணிக்கு கிடைக்கும்.

Story first published: Monday, May 14, 2018, 22:54 [IST]
Other articles published on May 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+