Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் அதே நினைப்பாவே இருக்கு பாஸ்.. அதான் பெர்பார்மென்ஸ் சரியில்லை.. மேக்ஸ்வெல்!

அகமதாபாத்: இன்னும் உலகக் கோப்பை வெற்றி மிதப்பிலிருந்தே நான் விடுபடவில்லை. எனவேதான் ஐபிஎல்லில் இந்த முறை நான் அதிரடியாக ஆட முடியாமல் உள்ளேன் என்று கூறியுள்ளார் கிளன் மேக்ஸ்வெல்.

கடந்த வருட ஐபிஎல் தொடரின்போது பட்டாசாகப் பொறிந்து தள்ளியவர் மேக்ஸ்வெல். ஆனால் இந்த தொடரில் இதுவரை அவர் ஒரு முறை கூட 50 ரன்கள் எடுக்கவில்லை. மாறாக சாதாரணமாக ஆடி வருகிறார்.

கடந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் 95, 89, 95 என அதிரடி காட்டியவர் மேக்ஸ்வெல். ஆனால் இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லின் அதிரடிக்காக கொட்டாவி விட்டடி காத்திருக்கிறது.

ஏன் இப்படி பாஸ் என்று மேக்ஸிடம் கேட்டால் சிரித்தபடி அவர் அளித்த பதில் இது....

மிதப்பு

மிதப்பு

உலகக் கோப்பைப் போட்டி வெற்றி போன்ற மிகப் பெரிய சந்தோஷத்திலிருந்து உடனடியாக விடுபட்டு அடுத்த தொடருக்கு அதி வேகமாக வருவது என்பது கஷ்டமானது. அந்த சிக்கல்தான் தற்போது எனக்கு உள்ளது.

அருமையான வெற்றி

அருமையான வெற்றி

உலகக் கோப்பைத் தொடர் அபாரமாக, அருமையாக இருந்தது. கோப்பையை வென்றது சிறப்பானது. அதிலிருந்து உடனடியாக அடுத்த தொடருக்குள் பிரவேசிப்பது என்பது சிரமமானது.

சவால்

சவால்

ஐபிஎல் தொடரில் ஐக்கியமாகி அதிரடியாக ஆடுவது என்பது சவாலாக உள்ளது. காரணம், இன்னும் வெற்றி மயக்கத்திலிருந்து நாங்கள் யாருமே மீளாமல் உள்ளோம். இதற்கு சற்று அவகாசம் பிடிக்கலாம்.

சரியான நேரத்தில் அடிப்பேன்

சரியான நேரத்தில் அடிப்பேன்

அதேசமயம், சரியான நேரத்தில் நான் பார்முக்கு வந்து அதிரடியாக ஆடுவேன். அதில் ரசிகர்களுக்கு சந்தேகம் வேண்டாம். சற்று டைம் எடுக்கும், அவ்வளவுதான் என்றார் மேக்ஸ்வெல்.

ஒரு போட்டி மட்டுமே வெற்றி

ஒரு போட்டி மட்டுமே வெற்றி

பஞ்சாப் அணி இந்தத் தொடரில் சொதப்பி வருகிறது. நான்கு போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் மட்டுமே அது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 21, 2015, 16:21 [IST]
Other articles published on Apr 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+