Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப வலிமையா உருவாகிட்டு இருக்காகங்க... மேம்படுத்திக்கிட்டு இருக்காங்க.. போக்ளே லிஸ்ட்

துபாய் : கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதன்மூலம் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

அந்த அணியின் நிகோலஸ் பூரன், கிறிஸ் கெயில், மாக்ஸ்வெல் போன்ற வீரர்களும் ஷமி உள்ளிட்ட பௌலர்களும் அணிக்கு நம்பிக்கை அளித்து வருவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

அந்த அணியில் பூரன் மற்றும் கெயில் ஆகியோர் உள்ள நிலையில், எதிரணியினர் அதுகுறித்து எளிதாக எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட பஞ்சாப்

சுதாரித்துக் கொண்ட பஞ்சாப்

ஐபிஎல்லின் முதல் பாதியில் சரியான போட்டிகளைத் தரத் தவறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஆனால் கடந்த 3 போட்டிகளில் சுதாரித்துக் கொண்டுள்ள அந்த அணி தொடர்ந்து வெற்றியை அளித்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது

எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது

இந்நிலையில் அந்த அணி வலிமையான அணியாக உருமாறி வருவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த அணியின் நிகோலஸ் பூரன் மற்றும் கிறிஸ் கெயில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் எதிரணியினர் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

சிறப்பான பௌலிங்

சிறப்பான பௌலிங்

அணியின் பௌலர் முகமது ஷமி அணியின் முக்கியமான வலிமைகளில் ஒருவராக உள்ளதாகவும் போக்ளே மேலும் கூறியுள்ளார். அவரின் சில பந்துவீச்சுகள் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அவரது சூப்பர் ஓவர் பௌலிங்கையும் அவர் சுட்டிக் காட்டினார்.

வெற்றியை தக்கவைப்பார்

வெற்றியை தக்கவைப்பார்

மேலும் அணியின் கிளென் மாக்ஸ்வெல்லையும் சிறப்பாக கையாள்வதாகவும் போக்ளே குறிப்பிட்டுள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியில் மாக்ஸ்வெல் 31 ரன்களுக்கு 1 விக்கெட்டை எடுத்ததுடன் 32 ரன்களையும் குவித்துள்ளார். அவர் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துக் கொள்வார் என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் போக்ளே கூறியுள்ளார்.

உறுதி செய்யவேண்டிய பேட்டிங் ஆர்டர்

உறுதி செய்யவேண்டிய பேட்டிங் ஆர்டர்

பஞ்சாப் அணி தொடர்ந்து சரியான திட்டமிடலுடன் ஷமியுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரையும் கொண்டுவந்தால் அணியின் தொடர் வெற்றிகளை உறுதி செய்ய முடியும் என்றும் போக்ளே கூறியுள்ளார். மேலும் பேட்டிங் ஆர்டரையும் ஜிம்மி நீசமை கொண்டு உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Thursday, October 22, 2020, 12:42 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+