Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்! முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்!

Recommended Video

முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்..வீடியோ

மொஹாலி : டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சின் துவக்கத்தில் சிறப்பாக பந்துவீசி கலக்கினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி அணி பேட்டிங் ஆட வந்த போது முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் அஸ்வின்.

முதல் பந்திலேயே..

முதல் பந்திலேயே..

டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இன்னிங்க்ஸின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முற்பட்ட ப்ரித்வி, பந்து வரும் திசையை சரியாகக் கணிக்கத் தவறினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதனால், பந்து பேட்டில் எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணி அதிர்ச்சி அடைந்தது. அஸ்வின் முதல் ஓவரை வீசி முதல் பந்தில் விக்கெட் எடுத்தது ஆச்சரியமான நிகழ்வாக அமைந்தது.

முன்னணி சுழற் பந்துவீச்சாளர்

முன்னணி சுழற் பந்துவீச்சாளர்

அஸ்வினை இந்திய ஒருநாள் அணியில் எடுப்பதில்லை. டெஸ்ட் அணியிலும் அவர் நிலை கவலைக்கிடம் தான். இந்த நிலையில், தான் இன்னும் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் தான் என நிரூபித்துக் காட்டியுள்ளார் அஸ்வின்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

இந்த போட்டியில் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், இரண்டு துவக்க வீரர்களையும் வீழ்த்தினார் அஸ்வின். கடந்த போட்டியில் 4 ஓவர்களில் 26 ரன்னும், முதல் போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்து இருந்தார் அஸ்வின்.

ஒரு போட்டியில் அதிகம்

ஒரு போட்டியில் அதிகம்

மன்கட் ரன் அவுட் சர்ச்சைக்கு அடுத்த போட்டியில் மட்டுமே அஸ்வின் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து விமர்சனத்துக்கு உள்ளானார். அதை தவிர்த்து பிற போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, April 2, 2019, 0:20 [IST]
Other articles published on Apr 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+