Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கப்பா கிறிஸ் கெயிலை காணோம்? ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் செய்த அஸ்வின்.. கடைசியில் ஏமாந்தது யார்?

மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

இதை வைத்து ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி மற்றும் அதன் கேப்டன் அஸ்வின் ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் செய்துள்ளனர் என சமூக வலை தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகிய இரண்டு வீரர்களுக்கும் ஓய்வு அளித்தது. அவர்களுக்கு பதில் சாம் கர்ரன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் இடம் பெற்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகிய இரண்டு வீரர்களுக்கும் ஓய்வு அளித்தது. அவர்களுக்கு பதில் சாம் கர்ரன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் இடம் பெற்றனர்.

ஏப்ரல் ஃபூல் செய்த அஸ்வின்

ஏப்ரல் ஃபூல் செய்த அஸ்வின்

இந்த மாற்றத்தை எந்த ரசிகரும் எதிர்பாராத நிலையில், பலரும் அஸ்வின் ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் செய்துவிட்டார் என கூறி வருகிறார்கள். குறிப்பாக, பேன்டசி கிரிக்கெட் ஆடி வரும் பலர் தங்கள் அணியில் கெயில் - டை ஆகிய வீரர்களை தங்கள் பேன்டசி அணியில் சேர்த்த நிலையில், இந்த ஓய்வு முடிவால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

அதே போல கிறிஸ் கெயில் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம். அவர்களும், கெயில் போட்டியில் இல்லை என்பதை அறிந்ததும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் போட்டியை பார்க்க வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

தவறான முடிவு

தவறான முடிவு

சிலர் அஸ்வின் தவறான முடிவை எடுத்துள்ளார் என விமர்சனம் செய்தும் வருகின்றனர். கெயில் சிறப்பாக ஆடி வந்த நிலையில், அவரை நீக்க என்ன காரணம் என கேட்டு வருகின்றனர். அஸ்வினின் கேப்டன்சி மோசமாக இருப்பதாக விமர்சித்துள்ளனர்.

ஏமாந்தது யார்?

ஏமாந்தது யார்?

அதே சமயம், கிரிக்கெட் விமர்சகர்கள், ஏமாந்தது டெல்லி அணி தான் என கூறி உள்ளார்கள். எப்படி என்றால், டெல்லி அணி கெயிலை சமாளிக்க, அவருக்கு சிரமமான ஷார்ட் பால்-களை அதிகம் வீச நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

குழப்பம்

குழப்பம்

ஆனால், கெயில் இந்தப் போட்டியில் இல்லை என தெரிந்தவுடன் அந்த அணியின் பந்துவீச்சு திட்டங்கள் கடைசி நேரத்தில் குழப்பம் அடைந்திருக்கலாம் என கூறுகின்றனர். எப்படியோ, கெயில் ஆடாமல் போனது பலருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்பது மட்டும் உண்மை.

Story first published: Monday, April 1, 2019, 23:00 [IST]
Other articles published on Apr 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+