ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. “கிறிஸ்”ஐ வைத்து பஞ்சாப்பை கலாய்த்த டெல்லி கேபிடல்ஸ்.. ஆனா புரியலை!!
மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் ஆடவில்லை.
அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்பாராத பலரும் பஞ்சாப் அணி ஏன் இந்த முடிவை எடுத்தது என விமர்சித்து வந்தனர். இது ஒருபுறம் இருக்க, கிறிஸ் கேயில் இல்லாத பஞ்சாப் அணி சரியான துவக்கம் பெறவில்லை என்பதை கேலி செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

மோசமான துவக்கம்
கிறிஸ் கெயில் இல்லாத நிலையில் ராகுல் - சாம் கர்ரன் பஞ்சாப் அணிக்கு துவக்கம் அளித்தனர். ராகுல் 15 ரன்னுக்கு கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 15 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்தது பஞ்சாப்.

“கிறிஸ்” இருந்தால்..
இதை கேலி செய்ய திட்டமிட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி, "உங்கள் அணியில் "கிறிஸ்" இருந்தால் சிறப்பான துவக்கம் கிடைக்கும்." என இரட்டை அர்த்தம் கொள்ளும்படி பஞ்சாப் அணியை ட்விட்டரில் கேலி செய்து இருந்தது.
இரண்டு அர்த்தம்
கிறிஸ் கெயில் இல்லாததால் பஞ்சாப் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை என்பதை குத்திக் காட்டியது ஒரு அர்த்தம். மறுபுறம், "கிறிஸ்" மோரிஸ் இருந்ததால் டெல்லி அணி சிறப்பான துவக்கம் பெற்றது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

நமக்கு புரியலையே!
இந்த "இங்கிலீஷ் காமெடி" தமிழ்நாட்டுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், சில டெல்லிவாலாக்கள் இந்த ட்விட்டர் பதிவை ரசித்து, பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications