இந்த ராகுல் பேட்டிங் ஒண்ணும் சரியில்லையே.. இவரை உலகக்கோப்பை டீம்ல தயவு செஞ்சு எடுக்காதீங்க!!
மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் கேஎல் ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராகவும், மேல் வரிசை பேட்ஸ்மேனாகவும் ஆடி வந்தவர் ராகுல். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ராகுல் சில போட்டிகளில் அருமையாக ரன் குவிப்பதும், தொடர்ந்து பல போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதுமாக இருந்து வந்தார்.

பார்மை மீட்டார்
ஐபிஎல் தொடருக்கு முன் ஆஸ்திரேலிய தொடரில் தான் பங்கேற்ற போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இதனால், ராகுல் தன் இழந்த பார்மை மீட்டு விட்டார். உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்ற பேச்சு கிளம்பியது.

மாறவில்லை
ஆனால், "நான் அப்படியெல்லாம் மாறிவிடவில்லை. இன்னும் அதே ராகுல் தான்" என அறைகூவல் விடுத்தது, ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வருகிறார். பஞ்சாப் அணிக்காக அவர் ஆடிய நான்கு போட்டிகளில், மூன்று போட்டிகளில் சொதப்பி உள்ளார்.

ராகுல் சொதப்பல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன், கொல்கத்தா போட்டியில் 1 ரன், டெல்லி போட்டியில் 15 ரன் என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் குவித்தார்.

பிரச்சனை
இப்போது பிரச்சனை இது தான். "நான்கு போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே நன்றாக ஆடுவேன். மற்ற போட்டிகளில் சொதப்புவேன்" என ராகுல் கூறும் நிலையில், அவர் தன் மீதான நம்பகத்தன்மையை இழந்துள்ளார்.

நம்பகத்தன்மையற்ற ராகுல்
பேட்டிங்கில் நம்பகத்தன்மையற்ற ராகுலை உலகக்கோப்பை அணியில் சேர்ப்பதை விட, வேறு வீரருக்கு வாய்ப்பளிப்பதே சிறந்த முடிவாக இருக்கும். ஆனால், கோலியின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் ராகுலுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications