Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி சொதப்பிட்டீங்களே அஸ்வின்.. அருமையான எல்.பி.டபுள்யூ வாய்ப்பு போச்சே.. ஏமாந்த சாம் கர்ரன்!!

மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ஒரு விக்கெட் வாய்ப்பை டிஆர்எஸ் ரிவ்யூ கேட்காமல் நழுவ விட்டார்.

சாம் கர்ரன் ஓவர்

சாம் கர்ரன் ஓவர்

முதலில் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. 15வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை மனிஷ் பாண்டே சந்தித்தார். சாம் கர்ரன் வீசிய பந்து, மனிஷ் காலில் பட்டது. உடனே சாம் கர்ரன் எல்பிடபுள்யூ, கேட்டு அம்பயரை பார்த்தார்.

அஸ்வின் மறுப்பு

அஸ்வின் மறுப்பு

ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். உடனே, சாம் தன் அணியின் கேப்டன் அஸ்வினை பார்த்தார். ஆனால், அஸ்வின் ரிவ்யூ கேட்க மறுத்துவிட்டார். பின்னர் ரீப்ளே காட்டப்பட்டது.

சாம் கர்ரன் ஏமாற்றம்

சாம் கர்ரன் ஏமாற்றம்

அதில் பந்து சரியாக லைனில் பிட்ச் ஆகி, ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இந்த பந்துக்கு ரிவ்யூ கேட்டு இருந்தால் மனிஷ் பாண்டே 2 ரன்களிலேயே வெளியேறி இருப்பார். விக்கெட் வாய்ப்பு பறிபோனதால் சாம் கர்ரன் ஏமாற்றம் அடைந்தார்.

அஸ்வின் தவறான கணிப்பு

அஸ்வின் தவறான கணிப்பு

மனிஷ் பாண்டே இந்தப் போட்டியில் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் தன் தவறான கணிப்பால் ஒரு விக்கெட் வாய்ப்பை வீணடித்தார். ரிவ்யூ கையில் இருந்தும், அதை 15வது ஓவரில் அஸ்வின் பயன்படுத்துவதில் என்ன தயக்கம்?

Story first published: Monday, April 8, 2019, 23:07 [IST]
Other articles published on Apr 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+