Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரீஸை விட்டு காலை வெளியே வைச்சா நான் ரன் அவுட் செய்வேன்.. மின்னல் வேகத்தில் செயல்பட்ட அஸ்வின்!!

மொஹாலி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ஆன 22வது ஐபிஎல் போட்டியில் அஸ்வின் செய்த வேகமான ரன் அவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், அஸ்வின் செய்த மன்கட் ரன் அவுட்டை ஞாபகப்படுத்துவதாக அமைந்தது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 14வது ஓவரை வீசினார் அஸ்வின். டேவிட் வார்னர் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்டார். பந்தை அவர் நேராக அடிக்க, பந்து அஸ்வினிடம் வந்தது.

சில வினாடிகளில்…

சில வினாடிகளில்…

அப்போது எதிர்முனை பேட்ஸ்மேன் முஹம்மது நபி ரன் ஓடுவதற்காக சில அடி தூரம் முன்னேறி சென்றார். அஸ்வின், தன் கையில் கிடைத்த பந்தை எடுத்து அவரை எளிதாக ரன் அவுட் செய்தார். இவை அனைத்தும் சில வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது.

நபி பரிதாபம்

நபி பரிதாபம்

ஹைதராபாத் பேட்டிங்கின் போது, குறைந்து வரும் ரன் ரேட்டை சரி செய்ய, விரைவாக ரன் குவிக்கவே நபி முன்னே அனுப்பப்பட்டார். ஆனால், அவர் கிரீஸை கவனிக்காமல் முன்னேறிச் சென்று, பரிதாபமாக அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

மன்கட் போன்றது

மன்கட் போன்றது

வார்னர் அடித்த பந்தை எடுத்து நபியை ரன் அவுட் செய்தாலும், பந்து வீசாமல் பட்லர் கிரீஸை விட்டு முன்னேறிச் சென்றதால், அஸ்வின் செய்த மன்கட் ரன் அவுட் போலவே இருந்தது இந்த ரன் அவுட். உண்மையில், நபி அஸ்வின் பந்து வீசும் முன்னரே கிரீஸை விட்டு ஒரு அடி முன்னே சென்று விட்டார்.

அஸ்வின் கவனித்திருப்பார்

அஸ்வின் கவனித்திருப்பார்

அஸ்வின், அப்போது அதை நிச்சயம் கவனித்திருப்பார். பின்னர், வார்னர் பந்தை நேராக அவரிடம் அடித்த உடன் விரைந்து பந்தை எடுத்து ரன் அவுட் செய்துவிட்டார். மன்கட் போல இந்த ரன் அவுட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 8, 2019, 23:49 [IST]
Other articles published on Apr 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+