Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. கடைசி ஓவரில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

மொகாலி: கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், கடைசி ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மொகலியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக, டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். பிளேஆ-ப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

KXIP win by 14 runs as KKR falter in run chase; Punjab remain in play-offs hunt

இதையடுத்து மார்ட்டின் கப்தில், வோரா ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கினார்கள். வோரா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையிலும், கப்தில் 16 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 11 ரன்னில் நடையைக் கட்டினார்.

4-வது வீரராக வந்த சகா 38 ரன்களும், அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 பந்தில் 44 ரன்களும் எடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 168 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் நரைன் 18 ரன்னிலும், கம்பீர் 8 ரன்னிலும், உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்..

ஒருபக்கம் விக்கெட்கள் அசராமல் ஆடிய மற்றொரு துவக்க வீரரான லின் 84 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைபட்டது. சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா. இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, May 10, 2017, 1:02 [IST]
Other articles published on May 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+