Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மே.இ.தீவுகளின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்த 'சென்னை சூப்பர் கிங்ஸ்' பவுலர்!

சிட்னி: தென் ஆப்பிரிக்கா குவித்த 408 ரன்களை விரட்டி பிடிக்க கிளம்பிய மேற்கிந்திய தீவுகள் அணியை ஆரம்பத்திலேயே தடை போட்டு தடுத்து நிறுத்திவிட்டார், பந்து வீச்சாளர் கைல் அப்பாட். இதில், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விக்கெட்டும் அடங்கும். இந்த சூப்பர் பவுலர் அப்பாட்டைதான், சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு ஏலத்தில் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டி வில்லியர்சின் அதிரடி சதம் உதவியுடன் அந்த அணி 408 ரன்களை குவித்தது. இதை விரட்டி பிடிக்க வேண்டிய நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.

கிறிஸ் கெய்ல் மீது நம்பிக்கை

கிறிஸ் கெய்ல் மீது நம்பிக்கை

மே.இ.தீவுகள் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் மீதுதான் அந்த அணி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது. அவர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தால், தென் ஆப்பிரிக்காவின் ரன்களை விரட்டி பிடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் மே.இ.தீவுகள் ரசிகர்கள்.

கிளீன் பௌல்ட்

கிளீன் பௌல்ட்

ஆனால், 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ் கெய்ல், அப்பாட் வீசிய பந்தில் கிளீன் பௌல்ட் ஆகினார். அப்போது தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் விட்ட நிம்மதி பெருமூச்சின் காற்று அரங்கத்தையே அதிரச செய்தது என்றாலும் அது மிகையில்லை. ஏனெனில் கிறிஸ் கெய்ல் முந்தைய போட்டியில்தான், ஜிம்பாப்வேக்கு எதிராக, 2015 ரன்களை தனியாளாக எடுத்து அசத்தியிருந்தார். அவரது விக்கெட்டை அருமையான ஒரு பந்து மூலம் வீழ்த்தினார் அப்பாட்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

கிரீசை விட்டு விலகி பந்தை விளாச கெய்ல் முற்பட்டபோது, பந்து பேட்டின் கீழாக சென்று ஸ்டம்புகளை பதம் பார்த்தது. அத்தோடு விடவில்லை அப்பாட். ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய அழகான ஒரு பந்தால், மார்லன் சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சாமுவேல்ஸ். இவரும் ஜிம்பாப்வேக்கு எதிரான முந்தைய போட்டியில் அதிரடியாக ஆடி சதம் அடித்தவராகும்.

அடித்தளத்தில் ஆட்டம்

அடித்தளத்தில் ஆட்டம்

3.3 ஓவர்களிலே, வெஸ்ட் இண்டீஸ் 16 ரன்கள் எடுத்திருந்தபோது 2 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அந்த இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியது அப்பாட்தான். அதன்பிறகு மே.இ.தீவுகளால் மேலே எழும்ப முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குறைந்த விலையில் நிறைந்த தரம்

குறைந்த விலையில் நிறைந்த தரம்

மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக வீசிய அப்பாட் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சால் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராகும். ஆல்-ரவுண்டரான அவரை ரூ.30 லட்சம் என்ற குறைந்த விலையில் சென்னை வாங்கியது. ஏலம் நடந்தபோது, அப்பாட்டை கண்டுகொள்ளாத பிற ஐபிஎல் டீம்கள், இப்போது சென்னையை ஏக்கத்தோடு பார்க்கின்றன.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா இதற்கு முன்பு ஆடிய 2 போட்டிகளிலும் கைல் அப்பாட் சேர்க்கப்படவில்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிளான்டர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆட முடியாததால், அப்பாட் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 27, 2015, 15:23 [IST]
Other articles published on Feb 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+