Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த மண்ணில் எங்களின் முதல் வெற்றி.. அந்த இரு வீரர்கள் தான் காரணம்.. புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல்

லக்னோ: லக்னோ மைதானத்தின் பிட்ச்சை கணிக்க முடியாத சூழலில், கைல் மேயர்ஸ் ஆடிய ஆட்டம் எதிரணியை புரஷரில் வைத்ததோடு, நாங்கள் கூடுதலாக 30 ரன்கள் சேர்க்க உதவியதாக கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ரிஷப் பண்ட் இல்லையென்றாலும் வலிமையான கருதப்பட்ட டெல்லி அணி மீது பேட்டிங் மற்றும் பவுலிங் என்று இரு துறைகளிலும் லக்னோ அணி ஆதிக்கம் செலுத்தியது.

kyle Mayers attacked Delhi spinners and put back the pressure on them says LSG Captain KL Rahul in IPL 2023

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் ஆடப்படும் போட்டிகளில் அந்தந்த அணிகள் கண்டிப்பாக வெற்றிபெறும். சென்னை அணியெல்லாம் சேப்பாக்கத்தை தங்கள் கோட்டையாக வைத்துள்ளது. ஆனால் லக்னோ அணி தங்களது சொந்த மண்ணில் நேற்றுதான் முதல் போட்டியில் களமிறங்கியது.

அதுமட்டுமல்லாமல் பிட்ச்சின் தன்மை ரன் குவிப்பதற்கு ஏதுவாக இல்லை. ஏனென்றால் 193 ரன்கள் குவித்தாலும் முதல் 5 ஓவர்களில் லக்னோ அணியால் 25 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் லக்னோ தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்சர்கள் பறந்துகொண்டே இருந்தது. அவரின் 73 ரன்களால் லக்னோ அணி 194 என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

இதுகுறித்து லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேசுகையில், லக்னோ பிட்ச் பற்றி எங்களுக்கு எந்த தெளிவும் இல்லாமல் இருந்தது. ஆனால் டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் நம்பிக்கை கிடைத்துள்ளது. டாஸ் நமது கைகளில் இல்லையென்றாலும், இம்பேக்ட் பிளேயர் விதியால் எந்த வீரர்கள் தேவையோ அந்த அணியோடு நாம் விளையாடலாம். இந்தப் போட்டியில் 30 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தோம் என்றே நினைக்கிறேன். கைல் மேயர் அப்படி ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டார். டெல்லி ஸ்பின்னர்களுக்கு எதிராக அட்டாக் செய்து, பிரஷரிலேயே வைத்தார்.

kyle Mayers attacked Delhi spinners and put back the pressure on them says LSG Captain KL Rahul in IPL 2023

இன்னும் சொல்லப் போனால் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கினார்கள். ஆனால் லக்னோ அணி கம்பேக் தரமாக கொடுத்தது. அவருக்கு பிட்ச் பற்றி கவலையே இல்லை. அதேபோல் இன்றைய நாள் மார்க் வுட்டின் நாள் தான். ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளருக்கும் இதுவொரு கனவு. பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டர்கள். டெல்லி அணி பேட்ஸ்மேன்களை பிரஷரில் வைக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதனை அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செய்தார்கள் என்று தெரிவித்தார்.

சிறப்பாக பந்துவீசிய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், அக்சர் படேல் மற்றும் சேத்தன் சக்காரியா என்று டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். லக்னோ அணிக்காக அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் வுட்டிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, April 2, 2023, 7:13 [IST]
Other articles published on Apr 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+