
வேகப்பந்துவீச்சு
இந்திய அணி தேர்வு செய்துள்ள வீரர்களின் தீபக் சாஹர் கூடுதல் வீரராக மட்டுமே அணியில் இருக்கிறார் தவிர மெயின் அணியில் புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலாஜி, தீபக் சாஹர் தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் காரணமாக ஆறு மாதங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

கடும் போட்டி
அவர் ஒரு கடின உழைப்பாளி. அவருக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். தீபக் சாஹரிடம் எனக்கு பிடித்தது அவரால் என்ன முடியுமோ அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார். அணியில் தேர்வாகவில்லை என்பது குறித்து எல்லாம் அவர் கவலை கொள்ள மாட்டார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. வீரர்கள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது. தீபக் சாஹருக்கு பந்து வீசும் போது ஒரு கட்டுப்பாடு இருக்கும். புதிய பந்தில் அவர் ஸ்விங் செய்வார்.

திறமையான வீரர்
இதனால் தொடர்ந்து அவர் போட்டியில் விளையாடினால் முழு உடல் தகுதியுடன் இருப்பார் .அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக அவர் எடுத்த ஹாட்ரிக்கை யார் தான் மறக்க முடியும் என்றும் பாலாஜி கூறியுள்ளார். ஆசிய கோப்பை போட்டி துபாயில் நடைபெறும் நிலையில் புதிய பந்தில் வீசும் நுட்பங்களை வீரர்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே எதிரணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி நெருக்கடி தர முடியும்.

தீபக் சாஹர் முக்கியம்
புது பந்தில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய முதல் தேர்வு தீபக் சாஹர் தான். ஆனால் தற்போது நிறைய வீரர்கள் அணியில் இருக்கின்றனர். இதனால் நிறைய சவால்களும் போட்டிகளும் இருக்கின்றன.புது பந்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கும் வீரர் தான் உங்களுக்கு தேவை. பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் அணியில் இல்லை என்றால் தீபக் சாஹர்தான் உங்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தருவார் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











