For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மற்ற அணிகளை பாருங்க! ஆனால் இந்தியாவில் அந்த குறை இன்னும் இருக்கு.. சரி செய்வாரா ரோகித்

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, தோல்வியே தழுவாமல் விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்தியா விளையாடுகிறது.

ஆனாலும் இந்திய அணியில் ஒரு மிகப் பெரிய குறை இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுனர் ரிச்சர்ட்ஸ், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் 10 ஓவர் வீசி, 39 ரன்கள் தந்து, இரண்டு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

Lack of Batting all rounder is a big problem for India in icc world cup

இன்னொரு பக்கம் இங்கு பகுதிநேர பந்துவீச்சாளர் அசலங்கா பத்து ஓவர்கள் வீசி, நான்கு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.நியூசிலாந்து-இங்கிலாந்து போட்டியில், பேட்டிங்கில் ஆட்டநாயகன் விருது வாங்கி
"தாம் தற்பொழுது பந்துவீச்சில் சில மாற்றங்கள் செய்து பயிற்சி செய்து வருகிறேன்!" என்கிறார் finger&wrist spin all-rounder லிவிங்ஸ்டன்.

இது போட்டியில் பகுதிநேர பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது பற்றியது கிடையாது. பகுதி நேரத்தில் பந்து வீசுவதற்கு பந்துவீச்சாளர்களை உருவாக்குவது எப்படி? என்பது!
ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகப் பத்து ஓவர்கள் வீசுவதற்கு தான் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும் அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பதற்கான தகுதி, அவரது பந்துவீச்சில் வெளிப்படுகிறது.

இந்த நிலையில், பெரும்பாலும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு போகின்ற மாதிரி உலகக்கோப்பையில் ஆடுகளங்கள் இருக்காது. எனவே ஒரு முழுமையான பேட்ஸ்மேனிடமிருந்து, மூன்று முதல் ஐந்து ஓவர்கள் வாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துகொண்டால், இந்திய அணியும் இந்த உலகக்கோப்பையில் மிக வலிமையான பேட்டிங் யூனிட்டை பெற்றிருக்கும். மேலும் மற்ற அணிகளை விட பவுலிங் யூனிட்டில் சிறப்பான விக்கெட் டேக்கர்களும் இருப்பார்கள்.

சூரியகுமார் யாதவுக்கான நேரம் இது. இவரும் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதாக தகவல் உண்டு. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினால் திலக் வர்மாவும் இதைச் செய்ய முடியும். மேலும் தேவைப்பட்டால் ஒருகட்டத்தில் இவர் இஷான் கிஷான் இடத்தில் கூட விளையாடலாம்.

Lack of Batting all rounder is a big problem for India in icc world cup

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருக்கவே செய்கிறது. இந்த இந்திய அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த ஒரே பிரச்சனை, செய்த முயற்சிகள் பலித்து வெற்றி கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கை உடைந்து அவநம்பிக்கை ஏற்பட்டது.

இவர்களுக்குத் தேவையாக இருந்தது திட்டங்கள் பலித்து வெற்றி பெற்று நம்பிக்கை உருவாக வேண்டும். அது இந்த ஆசியக்கோப்பையில் நடந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தியா பெற்ற இரண்டு வெற்றிகள் மிகவும் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 13, 2023, 18:19 [IST]
Other articles published on Sep 13, 2023
English summary
Lack of Batting all rounder is a big problem for India in icc world cup மற்ற அணிகளை பாருங்க! ஆனால் இந்தியாவில் அந்த குறை இன்னும் இருக்கு.. சரி செய்வாரா ரோகித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+