Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெல்லாம் ஒரு நாடு..? உசுருக்கு உத்தரவாதமில்ல.. ஆள விடுங்க..! கும்பிடு போட்டு ஓடிய பயிற்சியாளர்

Recommended Video

Grant flower slams pok cricket | பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கிராண்ட் பிளவர் கடுமையான விமர்சனம்

ஹராரே: பாதுகாப்பு, சுதந்திரம் இல்லாத நாடு பாகிஸ்தான் என்று அந்நாட்டின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர். பிளவர் பிரதர்ஸ் என்றால் கிரிக்கெட் உலகத்தில் இவரை அனைவருக்கும் நன்றாக தெரியும்.

2014ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். உலக கோப்பை தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேற, அனைத்து பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ரத்து செய்தது.

பாதுகாப்பு கிடையாது

பாதுகாப்பு கிடையாது

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி அளித்த அனுபவங்கள் பற்றி கிராண்ட் பிளவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் அதிக வெறுப்பை ஏற்படுத்திய விஷயம், பாதுகாப்பு மற்றும் பணியின் போது எனக்கு சுதந்திரம் இல்லாததும் தான்.

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

கோச்சாக நான் பணியாற்றிய காலத்தில், சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் வென்றிருக்கிறது. இந்தியாவை ஓவலில் தோற்கடித்திருக்கிறோம். எனது பயிற்சியில் மிகச் சிறந்த வீரர் என்றால் பாபர் ஆசம் தான். சிறந்த பேட்ஸ் மேன்.

முதுகில் குத்திய அரசியல்

முதுகில் குத்திய அரசியல்

அந்நாட்டு அணியில் முன்னாள் வீரர்கள் பலர் எனது முதுகில் குத்தினர். அதிகமான அரசியல் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கூட அதிக அரசியல் இருக்கிறது.

நம்பிக்கை வையுங்கள்

நம்பிக்கை வையுங்கள்

அந்த அணி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் பின்னால் நில்லுங்கள். நேர்மறை சிந்தனையோடு செயல்படுங்கள்.

நிம்மதி

நிம்மதி

டிவி சேனல்களில் ஏகப்பட்ட அரசியல், பத்திரிகையாளர்கள் மற்றும் பாகிஸ்தான் வாரியத்தில் உள்ளவர்கள் என்று ஏகப்பட்ட அரசியல். நிச்சயம் அங்கிருந்து வந்ததில் எனக்கு பெரிய நிம்மதிதான்.

வலுப்படுத்த வேண்டும்

வலுப்படுத்த வேண்டும்

ஹாரிஸ் சோகைல் திறமைக்கும் கீழே ஆடுகிறார், அவரது சிறந்த ஆட்டத்தை இன்னமும் அவர் வெளிப்படுத்தவில்லை. மேலும் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

Story first published: Saturday, August 17, 2019, 13:28 [IST]
Other articles published on Aug 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+