Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விராட் கோலி மீது சிலருக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் ஓய்வு பெற்றார்..”.. முகமது கைஃப் பேச்சு

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு, வெறும் பேட்டிங் ஃபார்ம் சரிவு மட்டுமே காரணமல்ல என்றும், அணி நிர்வாகத்தில் உள்ள சிலர் அவர் மீது நம்பிக்கை வைக்காததே முக்கிய காரணம் என்றும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2025 மே மாதம், 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கையோடு விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திற்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரன் குவிக்க திணறியதால் அவர் ஓய்வு பெற்றதாக கருதப்பட்டது.

ஆனால் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய முகமது கைஃப், இதற்குப் பின்னால் உள்ள வேறொரு பின்னணியை போட்டு உடைத்துள்ளார். இது பற்றி கைஃப் பேசுகையில், "டெஸ்ட் ஓய்வு குறித்து கோலி பேசிய நேர்காணல்களைப் பார்க்கும் போதெல்லாம், அவரது முகத்தில் ஒருவித ஏமாற்றமும் வேதனையும் தெரிகிறது. அவரது ஃபார்ம் மோசமாக இருந்திருக்கலாம், ஆனால் நாம் பேசுவது விராட் கோலியைப் பற்றி.

Lack of Support and Backing From Team Management Forced Virat Kohli s Test Retirement says Mohammad Kaif

அணிக்குள் இருக்கும் சிலருக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை என்பது போலவும், தனக்கு உரிய முக்கியத்துவமும் ஆதரவும் கிடைக்கவில்லை என்பது போலவும் கோலி உணர்ந்ததாக எனக்குத் தோன்றுகிறது. அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தால், நிச்சயம் பழைய ஃபார்முக்கு திரும்பி மிரட்டியிருப்பார். ஏனென்றால் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து கம்பேக் கொடுப்பதில் கோலி கில்லாடி" என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியால் மீண்டு வந்திருக்க முடியும் என்பதற்கு அவரது ஒருநாள் போட்டி ஃபார்மே மிகப்பெரிய சாட்சி என்று கைஃப் சுட்டிக்காட்டினார்.

"கடந்த 2025 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி அடுத்தடுத்து 0 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்காக அவரை அணியிலிருந்து நீக்கியிருந்தால், இப்போது அவர் ஆடும் பெரிய இன்னிங்ஸ்களை நாம் பார்த்திருக்க முடியுமா? இது புதிதாக வரும் வீரர் அல்ல, விராட் கோலி! சாதாரண வீரர்களுக்கு பயன்படுத்தும் விதிமுறைகளை கோலிக்கு பயன்படுத்தக் கூடாது. ஃபார்ம் என்பது எல்லா வீரர்களுக்கும் சரியும். எந்த மனிதரும் மெஷின் கிடையாது; இது வீடியோ கேமும் அல்ல" என்று காட்டமாக தெரிவித்தார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 139 ரன்கள் விளாசிய கோலி, தனது கடைசி 11 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களை குவித்து அசுர பலத்துடன் திகழ்கிறார். இளம் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கோலியின் இருப்பு மிகப்பெரிய பலம் என்று கைஃப் பாராட்டியுள்ளார்.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?

"இந்திய பந்துவீச்சில் அனுபவ வீரர்கள் இல்லாததால் கேப்டன் கில் பல சவால்களை எதிர்கொள்கிறார். இதுபோன்ற சூழலில், கோலி களத்தில் முழு உடற்தகுதியுடன் ரன் குவிப்பது இளம் கேப்டன் கில்லுக்கு மிகப்பெரிய துணையாக இருக்கும். கோலி எவ்வளவு காலம் அணியில் நீடிக்கிறாரோ, அவ்வளவு காலம் அது இந்திய அணிக்கும் சுப்மன் கில்லின் கேப்டன்சிக்கும் நன்மையை தரும்" என்று கைஃப் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 30, 2026, 8:57 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+