Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ப இவரு தான் புதிய கோச்சா..? பரபரப்பும் கடைசி நேர டுவிஸ்ட்.. என்ன நடக்குமோ?

Recommended Video

Praveen Amre Indian Coach : இவர் தான் இந்திய அணியின் புதிய கோச்? ஆலோசனையில் பிசிசிஐ- வீடியோ

மும்பை: 2007ம் ஆண்டு டி 20 உலக கோப்பை வென்றபோது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராஜ்புத், தற்போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதால் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.

அண்மையில் முடிந்த உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது இந்திய அணி.

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனால் தற்போது உள்ள பயிற்சியாளர்களின் பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிசிசிஐ வெளியிட்டது.

அறிவிப்பு

அறிவிப்பு

புதிய பயிற்சியாளர்களை தேர்தெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடித்து அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே, நியூசி. வீரர் மைக் ஹெசன் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பித்தவர்கள்

விண்ணப்பித்தவர்கள்

டாம் மூடி, ராபின் சிங் ஆகியோரும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜான்டி ரோட்சும் தம் பங்குக்கு விண்ணப்பித்து இருக்கிறார். நாட்கள் ஆக, ஆக கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் யார், யார் விண்ணப்பிக்க இருக்கின்றனர் என்ற சஸ்பென்சும் நிலவி வருகிறது.

லால்சந்த் ராஜ்புத்

லால்சந்த் ராஜ்புத்

இந் நிலையில், அந்த பட்டியலில் யாரும் எதிர்பாராத வகையில் மேலும் ஒருவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். 2007ம் ஆண்டு இந்திய அணி மேலாளராக இருந்த லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அனேகமாக இவரையே தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிம். பயிற்சியாளர்

ஜிம். பயிற்சியாளர்

2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போது இந்திய அணியின் மேலாளராக இருந்தவர் லால்சந்த் ராஜ்புத். தற்போது ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 31, 2019, 20:52 [IST]
Other articles published on Jul 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+