ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார் லலித் மோடி

ஐபிஎல் முன்னாள் தலைவராக இருந்த லலித் மோடி மீது நிதி மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து நாட்டைவிட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார்.
அங்கிருந்தபடியே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து குடைச்சல்களை கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் லலித் மோடி வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
அவருடையை வேட்பு மனுவை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இத்தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
Story first published: Tuesday, December 17, 2013, 8:11 [IST]
Other articles published on Dec 17, 2013


Click it and Unblock the Notifications