Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் பணத்தை தலையில் ஏற்றிக் கொள்ளாதே.." சூர்யவன்ஷியை எச்சரித்த ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி!

லண்டன்: 2026 ஐபிஎல் தொடரில் தனது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, ஐபிஎல் தொடரை உருவாக்கியவரான லலித் மோடி ஒரு மாபெரும் கணிப்பையும், அதே நேரத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் பேசிய வைபவ், டி20 கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைப்பதே தனது லட்சியம் என்று கூறியிருந்தார். கிறிஸ் கெய்லின் 175 ரன்கள் தான் டி20 கிரிக்கெட்டில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதனை முறியடிப்பேன் என வைபவ் சவாலாகக் கூறினார். சண்டிகரில் நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், அவர் 28 பந்துகளில் 97 ரன்கள் குவித்து கெய்லின் அதிவேக சத சாதனையை (30 பந்துகள்) முறியடிப்பதற்கு மிக அருகில் வந்து ஆட்டமிழந்தார்.

Lalit Modi Warns Vaibhav Suryavanshi after IPL 2026 success Don t Let Money Get to Your Head

லலித் மோடியின் மாபெரும் கணிப்பு

வைபவ்வின் இந்த லட்சியம் குறித்து விஸ்டன் இதழுக்கு பேட்டியளித்த லலித் மோடி, "அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். சூர்யவன்ஷி, நீ நிச்சயம் டி20 போட்டியில் 200 ரன்கள் எடுப்பாய். நான் உனக்கு உறுதியளிக்கிறேன். நீ உலகிலேயே நம்பர் 1 சூப்பர் ஸ்டாராக மாறுவாய். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களை விடவும் பெரிய இடத்திற்கு நீ போவாய். யார் சொல்வதையும் கேட்காமல், உனது மனதிற்குப் பிடித்தபடி விளையாடு. எனது நெருங்கிய நண்பரான கிறிஸ் கெய்லின் சாதனையை நீ முறியடிப்பாய்" என்று கணித்துள்ளார்.

மோடி விடுத்த எச்சரிக்கை

அதே சமயம், வைபவ்விடம் லலித் மோடி ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். "உனக்குக் கிடைக்கும் பணம் உனது தலைக்கேறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இரு. உனது கவனம் எப்போதுமே ஆட்டத்தின் மீது மட்டுமே இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

“பீர் குடிக்க வரும் நண்பர்களை எல்லாம்..

“பீர் குடிக்க வரும் நண்பர்களை எல்லாம்.." ஐபிஎல் பயிற்சியாளர்களை வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர்

அடுத்தடுத்த சவால்கள்

2026 ஐபிஎல் சீசனில் 5 விருதுகளை வென்று அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியைத் தாண்டி மிக முதிர்ச்சியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தது இதற்குச் சான்றாகும். அவர் அடுத்து ஜூன் மாதத்தில் 'இந்தியா ஏ' அணிக்காக விளையாடவுள்ளார். மேலும், விரைவில் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணியில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Tuesday, June 2, 2026, 10:57 [IST]
Other articles published on Jun 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+