Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி ரஞ்சி அணிக்கு அடித்தது அதிர்ஷ்டம்..லான்ஸ் க்ளுஸனர் டெல்லி அணி ஆலோசகராக நியமனம்

டெல்லி : யாரும் எதிர்பார்க்காத விதமாக டெல்லி கிரிக்கெட் அமைப்பு தென்னாபிரிக்காவின் லான்ஸ் க்ளுஸனரை டெல்லி ரஞ்சி அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது.

இது உள்ளூர் கிரிக்கெட்டில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. லான்ஸ் க்ளுஸனர் டெல்லி அணியின் ஒருநாள் தொடர்கள் மற்றும் டி20 போட்டிகளில் ஆலோசகராக செயல்படுவார்.

Lance Klusner appointed as consultant of Delhi Ranji team

அதே சமயம், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மிதுன் மன்ஹாஸ் தொடர்ந்து செயல்படுவார். அவருக்கு உறுதுணையாகவே லான்ஸ் க்ளுஸனர் இருப்பார் என கூறியுள்ளது டெல்லி கிரிக்கெட் அமைப்பு.

லான்ஸ் க்ளுஸனர் தென்னாபிரிக்காவின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என கருதப்பட்டார். சிறந்த ஆல்-ரவுண்டராகவும் விளங்கினார். இதுவரை தென்னப்பிரிகாவுக்காக 171 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 3576 ரன்கள் மற்றும் 192 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19௦6 ரன்கள் மற்றும் 80 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

1999 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட்டநாயகன் விருது வாங்கியவர் லான்ஸ் க்ளுஸனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 3, 2018, 18:36 [IST]
Other articles published on Sep 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+