Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்ஸ்டாகிராமில் 'பாலோயர்ஸ்' இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை

கொழும்பு: கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்க பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அவர்களது திறமையையும், முந்தைய சாதனைகளையும் மட்டுமே அடிப்படையாக கொள்வது தான் உலக வழக்கம். ஆனால், ஒரு டி20 தொடரில் விளையாட வேண்டுமானால் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என்ற விசித்திரமான விதிமுறை முதன்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படி ஒரு வேடிக்கையான நிபந்தனையை விதித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது லங்கா பிரீமியர் லீக்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 6வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான வீரர்களின் புதிய ஏல விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், வெளிநாட்டு வீரர்கள் 'ஐகான்' பிரிவில் இடம்பெற 75 சர்வதேச டி20 போட்டிகளிலும், 100 லீக் போட்டிகளிலும், கடந்த 18 மாதங்களில் 30 போட்டிகளிலும் ஆடியிருக்க வேண்டும். இதோடு சேர்த்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்களுக்கு 250,000க்கும் அதிகமான பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

Lanka Premier League Rule No Instagram Followers Means No Entry for Foreign Cricketers

அதேபோல, 'ஸ்டார்' பிரிவில் இடம்பிடிக்க 50 சர்வதேச டி20 மற்றும் 100 லீக் போட்டிகளில் ஆடியிருப்பதோடு 250,000 பாலோயர்ஸும், 'கோல்டு' பிரிவில் இடம்பெற 30 டி20 போட்டிகள் மற்றும் 75 லீக் போட்டிகளுடன் 150,000 பாலோயர்ஸும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பிரிவான 'கிளாசிக்' பிரிவிலும் 20 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு நல்ல வணிக ரீதியான மார்க்கெட் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் திறமையை விட வீரர்களின் விளம்பர மதிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால், இப்படி வீரர்களிடம் லட்சக்கணக்கில் பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களே 2024க்கு பிறகு எவ்வித பதிவுகளும் இன்றி முடங்கியுள்ளன. இன்ஸ்டாகிராமில் அந்த தொடருக்கான பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100,000 கூட இல்லை. இது ரசிகர்களிடையே கடும் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, 'ஐகான்' மற்றும் 'ஸ்டார்' வீரர்களுக்கு 60,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் வரையும், 'பிளாட்டினம்' வீரர்களுக்கு 50,000 டாலர்களும், 'கோல்டு' வீரர்களுக்கு 30,000 டாலர்களும், 'கிளாசிக்' வீரர்களுக்கு 20,000 டாலர்களும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12 மாதங்களில் தேசிய அணிக்காகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டி20 தொடர்களிலோ விளையாடிய வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும், ஓய்வுபெற்ற உள்ளூர் வீரர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அந்த விதிகளில் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, May 9, 2026, 11:30 [IST]
Other articles published on May 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+