இலங்கை அரசின் முடிவை ஏற்போம்-சங்கக்காரா

ஐபிஎல் போட்டிகளில் ஆடி வரும் இலங்கை வீரர்கள் மே 5ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.ஐபிஎல் போட்டிகளை விட இலங்கை தேசிய அணியின் போட்டிகளே முக்கியம். எதிர்காலத்திலும், தேசிய அணியின் போட்டிகளுக்கே வீரர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று இலங்கை விளையாட்டுத்துறை கூறியுள்ளது.
இதனால் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் இலங்கை வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர்கள் உத்தரவை ஏற்போம் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து சங்கக்காரா கூறுகையில், ஐபிஎல் போட்டியில் ஆடி வரும் இலங்கை வீரர்கள், அரசு மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவை ஏற்போம். மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நாங்கள் பயணம் செய்து ஆடவுள்ளோம்.
இதை மனதில் வைத்தே கிரிக்கெட் வாரியம் எங்களைத் திரும்ப அழைத்துள்ளது. அதை ஏற்போம். அதேசமயம், மே 5ம் தேதி திரும்புவோமா அல்லது எப்போது திரும்புவோம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பேசி முடிவெடுக்க வேண்டும். வாரியத்தின் முடிவை ஏற்க வேண்டியது மட்டுமே எங்களது வேலை. அதை நாங்கள் செய்வோம் என்றார் சங்கக்காரா.
தற்போதைய தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக சங்கக்காரா செயல்படுகிறார். அதேபோல மஹளா ஜெயவர்த்தனே கொச்சி அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, June 7, 2012, 10:55 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications