
பந்துவீச்சு அபாரம்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பந்து வீசியது. தென்னாப்பிரிக்க அணி சிறப்பான துவக்கம் பெற்று இருந்தாலும், அதன் பின் இலங்கை அணி போட்டியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இலங்கை அதிர்ச்சி
தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வாய்ப்பு பயன்படுத்தி இலங்கை பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அந்த அணி 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

விமர்சனம் செய்தார்
அந்த அணியில் அதிகபட்ச ரன்களான 31 ரன்களை ஓஷாடா பெர்னாண்டோ எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், லசித் மலிங்கா பேட்ஸ்மேன்களை விமர்சித்து பேசினார்.

திறமை உள்ளது
இலங்கை பேட்ஸ்மேன்கள் குறித்து இப்படி பேசியுள்ளார் மலிங்கா. "அவர்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன். இது பரிசு அல்ல. அவர்களுக்கு திறமை உள்ளது. அதனால் தான் தேசிய அணிக்காக ஆடுகிறார்கள். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

வாய்ப்பு வராது
"அவர்கள் தங்கள் மதிப்பை உணர வேண்டும். நாங்கள் பேசி முடித்தாகி விட்டது. வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். அது தினமும் கிடைக்காது. அவர்கள் தான் வாய்ப்பை பற்றிக் கொள்ள வேண்டும்" என வருத்ததுடன் குறிப்பிட்டார் மலிங்கா.

இலங்கை அணி பரிதாபம்
இலங்கை அணி ஜெயவர்தனே, சங்ககாரா, முத்தையா முரளிதரன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் ஓய்வுக்கு பின்னால் பெரிதும் தடுமாறி வருகிறது. ஒரு காலத்தில் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக இருந்த இலங்கை தற்போது மிகவும் பின்தங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











