Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல…!! 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…!!

லண்டன்:15 ஆண்டுகளாக எல்லோரும் என்னை பற்றி பேசுவதற்கு தோனி தான் காரணம் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றிருக்கிறது. அந்த ஆட்டத்தில் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு, தோனி பீல்டிங் செய்தார்.

இந்நிலையில், தமது ஆட்டத்திறன், அணியில் இடம்பெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: 15 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம் இன்னும் மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டம் தான் காரணம்

ஆட்டம் தான் காரணம்

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் மக்கள் என்னைப் பற்றி பேச எனது ஆட்டமே காரணம். மேலும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் ஆதரவின் காரணமாகவும் ஆசீர்வாதங்களும் காரணமாக என்னால் இத்தனை ஆண்டுகள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி முடிகிறது.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை

வாய்ப்புகள் கிடைக்கவில்லை

தோனி அறிமுகமான பின்னர் எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்க வில்லை. இருப்பினும், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஆடி வருகிறேன். தற்போது எனது ஆட்டத்திறனை இப்போதிருக்கும் இளம் வீரர்களுக்கு ஏற்ப மாற்றி இருக்கிறேன்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மகிழ்ச்சி அளிக்கிறது

எனவே, உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி. இளம் வீரர்களான பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் உடன் ஓய்வு அறையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு

15 ஆண்டுகளுக்கு முன்பு

இந்திய அணியில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் அணியில் அவ்வப்போது இடம் பிடிப்பது நிராகரிக்கப்படுவதுமாக இருந்தார். தற்போது உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

Story first published: Sunday, May 26, 2019, 19:17 [IST]
Other articles published on May 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+