Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. கடைசி 5 ஆசிய கோப்பையில் என்ன நடந்தது.. யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்த முறை இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Recommended Video

Cricket-ல் கூட அரசியலா? Pakista-ன் T20World Cup Jersey ஆல் கடுப்பான ரசிகர்கள்

ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று துபாயில் மோதவுள்ளன.

கடைசி 5 போட்டி

கடைசி 5 போட்டி

இரு அணிகளும் கடைசியாக கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் மோதின. இதில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. உலகக்கோப்பையில் 2 ஆண்டுக்கு ஒருமுறையாவது இரு அணிகளும் மோதிக்கொண்டாலும், ஆசிய கோப்பையில் 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளின் வரலாறு குறித்து பார்க்க வேண்டியுள்ளது.

கடும் வாக்குவாதம்

கடும் வாக்குவாதம்

2010ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரில் வாக்குவாதம், சண்டை, த்ரில் என அனைத்தும் கலந்த போட்டியாக அமைந்திருந்தது. கம்பீர் மற்றும் கம்ரான் அக்மல் கடும் சண்டையிட்டனர். 268 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 262 /7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற சூழலில் ஹர்பஜன் சிங் சிக்ஸரை விளாசி த்ரில் வெற்றி பெற்று கொடுத்தார்.

சச்சினின் முக்கிய போட்டி

சச்சினின் முக்கிய போட்டி

2012ம் ஆண்டு நடைபெற்ற தொடர் தான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி ஆசிய கோப்பை. 331 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணியில் சச்சின் 52 ரன்களை விளாசினார். எனினும் அவரால் சதம் அடிக்க முடியவில்லை. எனினும் சச்சினின் கடைசி போட்டியை சிறப்பாக அமைத்து தர விராட் கோலி 142 பந்துகளில் 183 ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

 அஃப்ரிடியின் அதிரடி

அஃப்ரிடியின் அதிரடி

2014ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சாஹித் அஃப்ரிடியின் அதிரடியால் இந்தியா திணறியது. 245 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. எனினும் கடைசி நேரத்தில் அஃப்ரிடி, ஜடேஜா மற்றும் அஸ்வினின் பந்துவீச்சை பொளந்துக்கட்ட பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

திணறிய இந்தியா

திணறிய இந்தியா

2016ம் ஆண்டு ஆசிய கோப்பை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவின் பவுலிங்கில் வெறும் 84 ரன்களை மட்டுமே குவித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கும் நெருக்கடி கொடுத்தது. முகமது அமீரின் பவுலிங்கில் ரோகித் சர்மா, ரகானே, சுரேஷ் ரெய்னா என டாப் ஆர்டர் சரிந்தது. இதனால் 8 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போயிருந்தன. எனினும் விராட் கோலி 49 பந்துகளில் 51 ரன்களை நிதானமாக அடித்து வெற்றி தேடி தந்தார்.

2018ம் ஆண்டு வெற்றி

2018ம் ஆண்டு வெற்றி

கடைசியாக நடைபெற்ற 2018ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சுலபமான வெற்றியை பெற்றது. 238 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி எந்தவித சிரமமும் இன்றி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தாக்கம் ஏற்படுத்தவில்லை.

Story first published: Wednesday, August 24, 2022, 12:34 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+