Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்.. கடும் நெருக்கடியில் இந்தியா.. தொடர்ந்து ஆஸி முதலிடம்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகள் முடிவில் டாப் 2 இடத்தை பிடிக்கும் அணி தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனால் இம்முறை இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கியது. ஆனால் கேப்டன்ஷிப் மாற்றம் என பல சிக்கலை இந்தியா சந்தித்தது.

புதிய பட்டியல்

புதிய பட்டியல்

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது. இதே போன்று பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால், புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஆஸி முதலிடம்

ஆஸி முதலிடம்

இதில் ஆஸ்திரேலிய அணி 77.7 புள்ளிகள் சதவீதத்துடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 66.6 புள்ளிகள் சதவீதத்துடன் பாகிஸ்தான் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான எஞ்சிய போட்டிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியாவின் இடம்

இந்தியாவின் இடம்

இந்தியாவுடன் முதல் டெஸ்டை இழந்த இலங்கை அணி 66.6 புள்ளிகள் சதவீதத்துடன் 3வது இடத்தையும்,60 புள்ளிகள் சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4வது இடத்திலும் உள்ளது.இந்திய அணி 54.16 புள்ளிகள் சதவீதத்துடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் 38.8 சதவீதத்துடன் 6வது இடத்தில் உள்ளது.

இந்தியா தகுதி பெறுமா?

இந்தியா தகுதி பெறுமா?

7வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 புள்ளிகள் சதவீதத்துடனும், இங்கிலாந்து அணி 9.25 சதவீதத்துடன் 8வது இடத்திலும் உள்ளது. இன்னும் இந்திய அணி 11 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் குறைந்தது 9 போட்டியில் வென்றால் மட்டும் இறுதிப் போட்டிக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும்.

Story first published: Tuesday, March 8, 2022, 19:23 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+