For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பைக் கால்பந்து… இதுவரை நடந்த போட்டிகளில் 'யார் டாப்.. யார் ஃபிளாப்' !

பிரேசிலியா: நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் ஒரு தோல்வியையும் தழுவாமல் அசத்தல் நடை போட்டுக் கொண்டிருக்கும் அணிகள் சிலதான்.

ஜாம்பவான் ஸ்பெயினே மண்ணைக் கவ்விய நிலையில் சாதாரண கோஸ்டாரிகா அணியெல்லாம் ஒரு தோல்வியைக் கூட தழுவாமல் கலக்கி வருவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி சில அணிகள்தான் தோல்வியே காணாமல் அடுத்த சுற்றுக்குள் ஜம்மென்று நுழைந்துள்ளன. இதில் ஜாம்பவான்களை விட சாதாரண அணிகள்தான் அதிகம் என்பது ஆச்சரியமானது.

ஏ பிரிவில்

ஏ பிரிவில்

ஏ பிரிவைப் பொறுத்தவரை அடுத்த சுற்றுக்கு நுழையப் போகும் அணி குறித்த ஒரு தெளிவு இல்லை. பிரேசில், மெக்சிகோ தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. அதேசமயம், குரோஷியா 3 புள்ளிகளுடன் கடும் சவாலாக உள்ளது. காமரூன் வெளியேறி விட்டது.

பி பிரிவில்

பி பிரிவில்

பி பிரிவில் நெதர்லாந்தும், சிலியும் அடுத்த சுற்றுக்கு போய் விட்டன. ஆஸ்திரேலியாவும், ஸ்பெயினும் வெளியேறி விட்டன. எனவே இங்கு பிரச்சினை இல்லை.

சி பிரிவில்

சி பிரிவில்

சி பிரிவில் கொலம்பியா மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஐவரி கோஸ்ட் 3 புள்ளிகளுடன் உள்ளது. இந்த அணி தனது அடுத்த போட்டியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதேசமயம், ஜப்பான், கிரீஸ் அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. இவை அடுத்த போட்டியில் ஜெயித்து விட்டால் ஐவரி கோஸ்ட்டுக்கு கஷ்டமாகி விடும்.

டி பிரிவில்

டி பிரிவில்

டி பிரிவில் கோஸ்டாரிகா அடுத்த சுற்றுக்குப் போய் விட்டது. இத்தாலியும், உருகுவேயும் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றுதான் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியும். இங்கிலாந்து அவுட் ஆகி விட்டது.

இ பிரிவில்

இ பிரிவில்

இ பிரிவைப் பொறுத்தவரை பிரான்ஸ் மட்டுமே அடுத்த சுற்றுக்குப் போயுள்ளது. அதேசமயம், ஈகுவடாரும், சுவிட்சர்லாந்தும் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. ஹோண்டுராஸ் வெளியேறி விட்டது.

எப் பிரிவில்

எப் பிரிவில்

அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்குப் போய் விட்டது. 2வது அணியாக நைஜீரியாவுக்கு வாய்ப்புகள் உள்ளன. ஈரானுக்கு வாய்ப்புகள் குறைவு. போஸ்னியா வெளியேறி விட்டது.

ஜி பிரிவில்

ஜி பிரிவில்

ஜி பிரிவில் குழப்ப நிலை நீடிக்கிறது. ஜெர்மனி 4 புள்ளிகளுடன் உள்ளது. அமெரிக்கா 3 புள்ளிகளுடன் இருக்கிறது. கானா 1 புள்ளியுடன் உள்ளது. போர்ச்சுகல் ஒரு போட்டியில் ஆடி தோல்வியுற்றுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் அது ஆட வேண்டியுள்ளது. எனவே இங்கு யார் அடுத்த சுற்றுக்குப் போவது என்பதில் குழப்பம் உள்ளது.

எச் பிரிவில்

எச் பிரிவில்

எச் பிரிவில் பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் கொரியாவும், ரஷ்யாவும் தலா ஒரு புள்ளிகளுடன் உள்ளனர். அல்ஜீரியா ஒரு போட்டியில் ஆடி தோல்வியுற்றுள்ளது. அதற்கு வாய்ப்பு குறைவுதான்.

இது நேற்று வரை நடந்த போட்டிகளின் முடிவுப்படியான ஒரு அலசல்.. இன்று நிலைமை மாறலாம்.

Story first published: Sunday, June 22, 2014, 14:29 [IST]
Other articles published on Jun 22, 2014
English summary
Here is the latest status of points in FIFA world cup 2014 matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+