Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குரங்கு பாட்டுக்கு சிரிக்கறாங்களாம்... தந்தை -மகன் அலம்பலை பாருங்க!

மும்பை : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் நாயகனாக விளங்கினார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

மேலும் டி20 தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

தொடர்ந்து 4 மாதங்களுக்கு பிறகு மும்பை திரும்பிய அவர், தன்னுடைய குழந்தை அகஸ்தியாவுடன் நேரத்தை அதிகமாக செலவழித்து வருகிறார். அதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சிறப்பான ஹர்திக் பாண்டியா

சிறப்பான ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கவனத்தை பெற்றுள்ளார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. மேலும் பல மாதங்களாக மேற்கொள்ளாமல் இருந்த பௌலிங்கையும் இந்த தொடரின்மூலம் அவர் மேற்கொண்டுள்ளார்.

நாடு திரும்பிய ஹர்திக்

நாடு திரும்பிய ஹர்திக்

முன்னதாக ஐபிஎல்லிலும் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. தன்னுடைய மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு அவர் பல தருணங்களில் கைகொடுத்தார். அந்த அணி கோப்பையை வெற்றி கொள்ள இவரும் முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர்களை முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்பினார்.

மகனுடன் அதிக நேரம்

மகனுடன் அதிக நேரம்

முன்னதாக டி20 போட்டியின் தொடர் நாயகன் விருதை பெற்ற அவர், தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்தினரை 4 மாதங்களாக பிரிந்திருப்பது மிகவும் மன உளைச்சலை தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து மும்பை திரும்பிய அவர், தன்னுடைய குழந்தை அகஸ்தியாவுடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறார்.

புகைப்படம் வெளியீடு

புகைப்படம் வெளியீடு

குழந்தையுடன் தான் செலவழிக்கும் தருணங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய குழந்தை மற்றும் தான் இணைந்துள்ள புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 குரங்குகள் ரைமிற்கு தந்தையும் மகனும் சிரிப்பதாகவும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Story first published: Tuesday, December 15, 2020, 10:18 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+