Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுப்பேயில்லை.. பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.. 2 இந்திய வீரர்களை விளாசி தொங்கவிட்ட லட்சுமண்!

சென்னை: இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு மூத்த வீரர்கள் சரியாக ஆடாததுதான் காரணம் என்று மூத்த வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது வீரர்களை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக மீதம் உள்ள 3 போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். சென்னையில் இதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

லட்சுமண்

லட்சுமண்

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு மூத்த வீரர்கள் சரியாக ஆடாததுதான் காரணம் என்று மூத்த வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறியுள்ளார். அதன்படி, இந்திய அணியில் ரஹானே, ரோஹித் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக ஆடி இருக்கலாம். அவர்கள் விருப்பம் இன்றி ஆடினார்கள்.

பேட்டி

பேட்டி

இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் ஆடவில்லை. அதிலும் ரஹானே அவுட் ஆனதை பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் அவர் விருப்பமே இன்றி களத்திற்கு வந்தார். அவர் ஆட ரெடியாகாத மாதிரி இருந்தது.

அறிவுரை

அறிவுரை

ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்விங் போட போகிறார் என்று தெரியும். அவரின் நல்ல பந்தில் அவுட் ஆனால் கூட ஓகே. ஆனால் ரஹானே நின்ற விதமே தவறாக இருந்தது. போதிய பயிற்சி இன்றி அவர் பேட்டிங் நின்றது அவரின் பொஷிஷனிலேயே தெரிந்தது.

கோபம்

கோபம்

ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் அவுட் ஆன விதத்தை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. பவுலர்கள் எங்கே போட போகிறார்கள் என்று அவருக்கு தெரிய வேண்டும். அதுதான் நல்ல பேட்ஸ்மேனுக்கு அழகு.

விளாசினார்

விளாசினார்

ரோஹித் சர்மா இன்னும் கொஞ்சம் கவனமாக ஆட வேண்டும். தனக்கு எது டேஞ்சர் இடம் என்று அவருக்கு தெரியும். அந்த இடங்களில் எல்லாம் ரோஹித் சர்மா இன்னும் கவனமாக பேட்டிங் செய்ய வேண்டும், என்று லட்சுமண் அறிவுரை வழங்கி உள்ளார்.

Story first published: Thursday, February 11, 2021, 16:04 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+