Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் பெஸ்ட் ப்ளேயர் தான்.. இருப்பினும் எனக்கு கே.எல்.ராகுல் இருந்தால் பெட்டர்... லஷ்மணின் முடிவு

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியில் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்பது பேசுப்பொருளாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டியவர் குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ்.லஷ்மண் தனது விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஓப்பனிங்கிற்காக ரோகித் சர்மா, ஷிக்கர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

இவர்கள் மூவரில் யாருக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ரோகித் சர்மா ஃபுல் ஃபார்மில் உள்ளதால் அவருக்கான இடம் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் ஷிகர் தவான் விஜய் ஹசாரே ட்ராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் கே.எல்.ராகுலும் டி20 போட்டிகளிலும் தொடர்ந்து நல்ல ஃபார்மில் உள்ளார். இதனால் இவர்கள் இருவர்களுக்கான போட்டி அதிகரித்துள்ளது.

கருத்து

கருத்து

இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் விவிஎஸ்.லஷ்மண், இந்திய அணிக்கு 2வது ஓப்பனாராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கும். ஆனால் எனது தேர்வு கே.எல்.ராகுலாக தான் இருக்கும். ஏனெனில் கடந்த சமீப காலங்களாக கே.ராகுலுக்கு இந்திய அணியில் ஓப்பனராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அந்த இடத்திற்கு பொறுத்தமானவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஏன் தவான் இல்லை

ஏன் தவான் இல்லை

ஷிகர் தவான் கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடினர். மேலும் விஜய் ஹசாரே தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் எனது தேர்வு கே.எல்.ராகுலாக தான் இருப்பார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 9, 2021, 15:53 [IST]
Other articles published on Mar 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+