Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை : இந்தியா - பாகிஸ்தான் அணியில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் யார்? யார்?.. வெற்றி யாருக்கு

துபாய்: ஆசிய கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் யார் ஜொலிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

Recommended Video

India vs Pakistan: Asia Cup-ல் நடந்த Epic Clashes | Aanee's Appeal

6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் அணிகள் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

 ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

இந்த முறை ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் வகையில் 3 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதாவது லீக் சுற்றில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி, செப்டம்பர் 5ம் தேதி சூப்பர் 4 சுற்று மற்றும் செப்டம்பர் 11ம் தேதி இறுதி சுற்று என 3 வாய்ப்புள் உள்ளன. இதனால் இதில் வெற்றி பெறுவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்திய வீரர்கள் ஸ்கோர்

இந்திய வீரர்கள் ஸ்கோர்

இதுஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் இருந்து யார் அதிக ஸ்கோர் அடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம். அதாவது இந்திய அணியை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் 23 போட்டிகளில் விளையாடி 971 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா 27 போட்டிகளில் 883 ரன்களை குவித்துள்ளார்.

  1. சச்சின் - 971 ( 23 போட்டிகள் )
  2. ரோகித் சர்மா - 883 ( 27 போட்டிகள் )
  3. விராட் கோலி - 766 (24 போட்டிகள் )
  4. தோனி - 690 (24 போட்டிகள் )
  5. ஷிகர் தவான் - 613 (13 போட்டிகள் )
பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக சோயிப் மாலிக் தான் அதிக ஸ்கோரை அடித்துள்ளார். அவர் 21 போட்டிகளில் 907 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக உமர் அக்மல் 615 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

  1. சோயிப் மாலிக் - 907 ( 21 போட்டிகள் )
  2. உமர் அக்மல் - 615 ( 16 போட்டிகள் )
  3. இன்சமாம் உல் அக் - 591 (15 போட்டிகள் )
  4. யூனிஸ் கான் - 546 ( 14 போட்டிகள் )
  5. சாஹித் அஃப்ரிடி - 534 (27 போட்டிகள் )
வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

ஆசிய கோப்பையில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா தான் வலம் வருகிறது. இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணி 2 முறை வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 2012ம் ஆண்டு கோப்பையை வென்ற அந்த அணி இந்த முறை பாபர் அசாம் தலைமையில் கோப்பையை வெல்ல முணைப்பு காட்டி வருகிறது.

Story first published: Thursday, August 25, 2022, 17:37 [IST]
Other articles published on Aug 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+