சச்சினைப் பார்த்துக் கத்துக்கங்கப்பா: பாக். ஓபனர்களுக்கு அக்ரம் அறிவுரை

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஆட்டம் திருப்திகரமாக இல்லை என்று வாசிம் தெரிவித்துள்ளார். அவர் ஓபனிங் பேட்ஸ்மேன்களான முஹமது ஹபீஸ் மற்றும் அகமது ஷாசாத் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி பேட் செய்வது என்று டெண்டுல்கரைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு போட்டியில் கூட ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்பது வாசிமின் கருத்து.
இது குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது,
அவர்கள் டெண்டுல்கரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். டெண்டுல்கர் 38 வயதைத் தாண்டிவிட்டார். ஆனாலும் இன்னும் உறுதியாக இருக்கிறார். முதல் 10 ஓவர்களில் நிதானித்து விளையாடுகிறார். அவ்வளவு சீக்கிரம் அவுட் ஆகாதவாறு விளையாடுகிறார்.
அவர் நிறைய பேருக்கு முன் உதாரணம். நான் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது தான் ஒவ்வொரு பாகிஸாதானியரின் ஆசை. ஆனால் பாக். அணியின் ஆட்டம் திருப்தி அளிப்பதாக இல்லை.
இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. இந்தியா பவுலிங்கில் சற்று பின்தங்கியுள்ளது. முழுக்க முழுக்க பேட்டிங்கையே நம்பி உள்ளது என்றார்.
Story first published: Thursday, June 7, 2012, 11:49 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications