Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல டோணி ஆட்டத்தை பார்த்த எபெக்ட்டால்தான் செஞ்சுரி அடித்தேன்: 'ஏகலைவன்' அம்பத்தி ராயுடு!

பெங்களூர்: ஜிம்பாப்வேக்கு எதிராக, இக்கட்டான நிலைமையில், இந்திய அணியை மீட்டெடுத்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அம்பத்தி ராயுடு, தனது இந்த ஆட்டத்திற்கு காரணம், மகேந்திர சிங் டோணிதான் என்று தெரிவித்துள்ளார்.

100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தனது சதத்தால் தாங்கிப்பிடித்து 255 ரன்கள் என்ற கவுரமான ரன்களை எட்டச் செய்தார் அம்பத்தி ராயுடு.

பாதி ரன்கள்

பாதி ரன்கள்

அணியின் மொத்த ஸ்கோரில் கிட்டத்தட்ட பாதியான 124 ரன்களை ராயுடு மட்டுமே அடித்து நாட்-அவுட்டாக களத்தில் நின்றார். இந்த பங்களிப்பு காரணமாகவே, 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றியை ருசித்தது. இவருக்கு ஸ்டூவர்ட் பின்னி முக்கியமான நேரத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தார். அவர் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

டோணி காரணம்

டோணி காரணம்

இந்நிலையில், அம்பத்தி ராயுடு கூறியதாவது: கடந்த நான்கு வருடங்களாக, டி20 போட்டிகளில் இதுபோன்ற இக்கட்டான தருணங்களை சந்தித்துள்ளேன். இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் நான் நிலைத்து ஆடுவதற்கு, டோணிதான் காரணம். இதுபோன்ற பல இக்கட்டான தருணங்களில் டோணி களமிறங்கி அணியை காப்பாற்றியதை, டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்துள்ளேன். அவர்தான் எனக்கு இன்ஷ்பிரேஷன்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

முதலில் பேட்டிங் செய்ததுதான் இந்தியாவின் தொடக்க விக்கெட்டுகள் விரைந்து சரிவடைய காரணம். நான் இங்கிலாந்தில் பேட்டிங் செய்வதை போலத்தான் உணர்ந்தேன். அந்த அளவுக்கு பந்துகள் வந்தன. அடுத்த போட்டியில் டாசில் இந்தியா வெல்ல வேண்டும் என்று விரும்பிக்கொண்டுள்ளேன். பேட்டிங்கிற்கு சவாலான நேரத்திலும் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது.

கோஹ்லி டிப்ஸ்

கோஹ்லி டிப்ஸ்

இந்திய அணியில் எனக்கு தொடர்ச்சியாக இடம் கிடைக்காதது பற்றி வருத்தப்படுவதில்லை. நடப்பு நிலைமை என்ன என்பதை நான் உணர்ந்துள்ளேன். சீனியர்கள் ஆடுவதை பார்த்து ரசிக்கிறேன். அதேநேரம், எப்போதும் ஆடுவதற்கு மனதையும், உடலையும் தயார் நிலையில் வைத்துள்ளேன். மனதை தயார் செய்வதற்கு கோஹ்லி கொடுத்த டிப்ஸ் காரணம்.

கற்பனை கதாப்பாத்திரம்

கற்பனை கதாப்பாத்திரம்

நான் ஆடாத போட்டியில் கூட, மனதளவில் நான் களத்தில் ஆடிக்கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டு மேட்ச் பார்ப்பேன். இதனால், ஒவ்வொரு சூழ்நிலைக்கு தக்கபடி மனதிலேயே கணக்கீடு செய்வேன். இவ்வாறு செய்வதால், ஆட்டத்தில் நான் தொடர்ந்து இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது. இதற்காக கோஹ்லிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Story first published: Saturday, July 11, 2015, 15:42 [IST]
Other articles published on Jul 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+