Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏப்பா! பந்துவீச சொன்னா “யூ-டர்ன்”லாம் போடுற.. அம்பயரை கடுப்பேத்திய ஸ்பின்னர்!

மும்பை : இந்திய உள்ளூர் போட்டி ஒன்றில் சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் பந்து வீசிய முறை உலக கிரிக்கெட் அரங்கில் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது.

சிவா சிங் என்ற சுழல் பந்துவீச்சாளர் பந்து வீச ஓடி வரும் போது திடீரென 360 டிகிரி கோணத்தில் சுற்றிவிட்டு பந்து வீசினார்.

பார்த்த உடன் ஒரு நிமிடம் ஆச்சரியப்படுத்தும் இந்த பந்து வீசும் முறைக்கு அம்பயர் எதிர்ப்பு தெரிவித்து "டெட் பால்" என அறிவித்தார்.

ஆச்சரியம் அளித்த சிவா சிங்

சிவா சிங் பந்து வீசிய முறை ஆச்சரியம் என்றால், மற்றொரு புறம் அம்பயர் டெட் பால் என அறிவித்தது விவாதத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்த பந்து வீச்சு முறையை ஆதரித்தும், எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

எந்த போட்டியில் நடந்தது?

எந்த போட்டியில் நடந்தது?

சிகே நாயுடு அண்டர் - 23 தொடரில் பெங்கால் அணிக்கும், உத்தரபிரதேச அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் தான் உத்தரபிரதேச அணிக்காக ஆடிய இடது கை சுழல் பந்துவீச்சாளர் சிவா சிங், 360 கோணத்தில் சுழன்று பந்து வீசினார்.

அம்பயர் முடிவு என்ன?

அம்பயர் முடிவு என்ன?

அவர் அப்படி பந்துவீசி முடித்த உடன், அம்பயர் டெட் பால் என அறிவித்தார். பெங்கால் அணி வீரர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உத்தரபிரதேச அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். அம்பயரிடம் இதற்கான விளக்கத்தை கேட்டனர். கடைசியில் இது போல பந்து வீசினால் டெட் பால் தான் எனக் கூறி அப்போதைக்கு இந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தவறான பந்துவீச்சா?

தவறான பந்துவீச்சா?

எனினும், ட்விட்டரில் வெளியான வீடியோ காட்சி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இது தவறான பந்துவீச்சு என குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறை என பாராட்டு

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறுகையில், "இதை ரசிக்கிறேன். பந்துவீச்சாளர்கள் புதிய முறைகளை கொண்டு வர மறுக்கிறார்கள் என கூறி வருகிறோம். இந்த பந்துவீச்சு முறையில் எந்த பிரச்சனையும் இல்லை" என கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, November 8, 2018, 17:58 [IST]
Other articles published on Nov 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+