Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Legends League cricket - சிக்சர்களை பறக்க விட்ட ரெய்னா, தடுமாறிய ஷிகர் தவான்.. SA வீரர் அபார சதம்

ஜோத்பூர் : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் வீரர்கள் லெஜெண்ட்ஸ் லீக் என்ற கிரிக்கெட் தொடரில் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் தங்களுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இதன் மூலம் முன்னாள் வீரர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. முன்னாள் வீரர்களை வைத்து இந்த போட்டிகளை நடத்தும் விளம்பரதாரர்களும் லாபத்தை ஈட்டுகின்றனர். இந்த நிலையில் லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

legends league cricket suresh raina shikhar dhawan

இதில் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், இர்ஃபான் பதான் போன்ற ஸ்டார் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

27 பந்துகளில் 44 ரன்கள் குவித்த அவர் ஐந்து பௌண்டரி 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவின் ஸ்ட்ரைக் ரேட் 162 என்ற அளவில் இருந்தது. இதேபோன்று மற்றொரு வீரரான குர்கீரத் சிங் 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. இதில் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஷிகர் தவான் களமிறங்கினார். தவான் பெரிய ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெறும் மூன்று பவுண்டரிகள் மட்டும் தான் அடித்தார். இதன் மூலம் 20 பந்துகளில் அவர் 21 ரன்கள் எடுத்தார்.

எனினும் மற்றொரு தொடக்க வீரரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே வான் வியக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 9 சிக்ஸர், 8 பவுண்டரிகளை விளாசிய அவர் 69 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் குஜராத் அணி 19.3 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Monday, September 23, 2024, 13:50 [IST]
Other articles published on Sep 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+