LLC 2024 -கில் எல்லாம் ஓரம் போங்க! பட்டையை கிளப்பிய ஷிகர் தவான்.. அவசரப்பட்டு ரிட்டயர் ஆயிட்டாரு
ஜோத்பூர் : லெஜன்ட் லீக் கிரிக்கெட் தொடரில் நான்காவது லீக் ஆட்டம் ஜோத்பூர் நகரில் நடைபெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான சதன் சூப்பர் ஸ்டார் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான குஜராத் அணியும் பல பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சதர்ன் ஸ்டார் அணியில் பார்த்திவ் பட்டேல் நான்கு ரன்களிலும் மார்ட்டின் குப்தில் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேதார் ஜாதவ் ஒரு ரன்னில் வெளியேறினார். பவன்நெகி இரண்டு ரன்களில் திரும்பினார் இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். சத்துரங்க டி சில்வா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இதில் சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. குஜராத் பந்துவீச்சு தரப்பில் ஸ்ரீசாந்த் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. எனினும் மனன் சர்மா நான்கு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனை அடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் குஜராத் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக ஷிகர் தவான் விளையாடினார். ஷிகர் தவான் எப்போதும் போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று சிக்சர் 3 பவுண்டரி எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், ஷிகர் தவான் தன்னுடைய ஸ்கோர் குவிக்கும் வேகத்தை குறைத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் மற்ற வீரர்கள் எல்லாம் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழக்க ஷிகர் தவான் 48 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கையிப் ஐந்து ரன்களிலும் லீண்டல் சிம்மன்ஸ் ஏழு ரன்களிலும் வெளியேறினர். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. சதர்ன் ஸ்டார் பந்து வீச்சில் அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications