Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் சில்லறை போடுங்க சாமி: ஜடேஜாவிடம் கேட்ட சேவாக்

டெல்லி: கையில் சில்லறை இல்லாமல் அல்லாடுகிறோம் கொஞ்சம் பேடிஎம்மில் காசு போடுங்க பாஸ் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ரவீந்திர ஜடேஜாவிடம் தெரிவித்துள்ளார்.

Lend me some money: Sehwag asks Ravindra Jadeja

ட்விட்டரில் பன்ச் பரமசிவமாக உள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். அவரது பன்ச் ட்வீட்டுகளுக்காகவே பலர் அவரை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார்கள். மோடி பாட்டுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.

மக்கள் அந்த 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வாங்குவதற்குள் ஓய்ந்து போய்விடுகிறார்கள். இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஸ்பான்சரான பேடிஎம் ரூ. 1 லட்சம் அளித்துள்ளது.(இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா சிறப்பாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)

இதை பார்த்து சேவாக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வா ஜட்டு பாய்! நாங்கள் எல்லாம் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை இல்லாமல் அல்லாடுகிறோம். இந்நிலையில் உங்களுக்கு பேடிஎம் ரூ. 1 லட்சம் அளித்துள்ளது. அதில் கொஞ்சத்தை என் பேடிஎம் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 30, 2016, 8:55 [IST]
Other articles published on Nov 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+