Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல கொரோனா லீக்க முறியடிப்போம்... அப்புறமா ஐபிஎல்ல நடத்தலாம்

டெல்லி : இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து ஐபிஎல் 2020 தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் எப்பொழுது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரிடையே இருந்த நிலையில், தற்போது பிசிசிஐயின் இந்த அறிவிப்பிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதலில் உலக கொரோனா லீக்கை முறியடிப்போம் என்று ரசிகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்

தேங்கிய தொடர்

தேங்கிய தொடர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 29ம் தேதி துவங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள், இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 24ம் தேதிமுதல் மத்திய அரசு அமல்படுத்திய 21 நாள் ஊரடங்கு தற்போது அடுத்த மாதம் 3ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த சந்தேகம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

பிசிசிஐ அதிகாரிகள் அறிவிப்பு

இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இப்பொழுது நடக்குமா, மூடிய அரங்கத்திற்குள் நடக்குமா, வெளிநாட்டு வீரர்கள் எப்படி இந்தியா வருவார்கள் என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவந்த ஐபிஎல் தொடரின் நிலை தற்போது தெள்ளத்தெளிவாகியுள்ளது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

அடுத்த அறிவிப்பு வரும்வரை காலவரையின்றி ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், முன்னதாக ஐபிஎல் அணிகளுக்கு இதுகுறித்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்தால், இது மேலும் நீட்டிக்கப்படக்கூடும் என்று கூறப்படுவதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

கொரோனா லீக்கை முறியடிப்போம்

கொரோனா லீக்கை முறியடிப்போம்

இதனிடையே, கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தாலும், முதலில் கொரோனா தொற்றை வெற்றிகரமாக முடியறிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிசிசிஐயின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரசிகர்கள், முதலில் உலக கொரோனா லீக்கை முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 15, 2020, 17:00 [IST]
Other articles published on Apr 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+