For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தள்ளிவைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு.. ஆனாலும் சிக்கல் உண்டு!!

Recommended Video

ஸ்ரீசாந்த் மீதான தடை தள்ளிவைப்பு, உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

டெல்லி : கிரிக்கெட் வீரர் மற்றது பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த 2013 ஐபிஎல் தொடரின் போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டிற்கு உள்ளானார்கள்.

தோனியை அவ்வளவு லேசுல எடை போடாதீங்க.. அவரு ரொம்ப முக்கியமானவரு.. உண்மையை சொல்லும் முன்னாள் கேப்டன் தோனியை அவ்வளவு லேசுல எடை போடாதீங்க.. அவரு ரொம்ப முக்கியமானவரு.. உண்மையை சொல்லும் முன்னாள் கேப்டன்

வாழ்நாள் தடை

வாழ்நாள் தடை

அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நீதிமன்ற விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால், சிறை தண்டனையில் இருந்து ஸ்ரீசாந்த் விடுதலையானார். எனினும், பிசிசிஐ தன் விசாரணையில் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

ஸ்ரீசாந்த் நிலை

ஸ்ரீசாந்த் நிலை

இதனால், ஸ்ரீசாந்த் இந்தியா முழுவதிலும் பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள எந்த கிரிக்கெட் மைதானத்திற்குள்ளும் நுழையக் முடியாத நிலை உள்ளது. மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களிலும் ஆட முடியாத நிலை உள்ளது.

விசாரணை

விசாரணை

ஸ்ரீசாந்த் தன் மீதான பிசிசிஐ-யின் வாழ்நாள் தடை தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். கீழ் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்திற்கு எதிராக தீர்ப்பு வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகினார் ஸ்ரீசாந்த். பல மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை நடைபெற்றது.

தள்ளி வைத்தது

தள்ளி வைத்தது

இதன் முடிவில், நீதிபதிகள் அசோக் பூஷன் - கே எம் ஜோசப் தலைமையிலான பெஞ்ச் ஸ்ரீசாந்த் மீதான தடையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 3 மாத காலத்திற்குள் ஸ்ரீசாந்த் மீதான தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என கூறியுள்ளது.

தெளிவுபடுத்திய நீதிமன்றம்

தெளிவுபடுத்திய நீதிமன்றம்

இதன் மூலம், ஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து பிசிசிஐ மீண்டும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவில் சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீசாந்த் மீதான குற்றங்கள் எதையும் நீதிமன்றம் மறுக்கவில்லை.

குற்றமற்றவரா?

குற்றமற்றவரா?

அதே போல, ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் குறித்து கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கிரிமினல் வழக்கு விசாரணையிலும் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என கூறியுள்ளது. இதன் மூலம் ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என நீதிமன்றம் கூறவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

மறுபரிசீலனை மட்டுமே!

மறுபரிசீலனை மட்டுமே!

பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையால் கடந்த 5-6 வருடங்களாக ஸ்ரீசாந்த் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதை மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை மட்டுமே பிறப்பித்துள்ளது.

வாழ்நாள் தடை நீக்கப்படுமா?

வாழ்நாள் தடை நீக்கப்படுமா?

இதன் மூலம், ஸ்ரீசாந்த் வாழ்நாள் தடை நீக்கப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை பிசிசிஐ மறுபரிசீலனை செய்து மீண்டும் வாழ்நாள் தடை விதித்தால் என்ன செய்வது? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, ஸ்ரீசாந்த் முழுமையாக வாழ்நாள் தடையில் இருந்து மீண்டுவிட்டார் என கூறி விட முடியாது.

Story first published: Friday, March 15, 2019, 14:33 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Life ban on S Sreesanth set aside by Supreme court, asks BCCI to reconsider punishment
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X