Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Life is Very Short Nanba.. அந்த முரளி விஜய் சிரிப்பைப் பாருங்களேன்.. அடடே அடடா!

சென்னை: ஐபிஎல் 2020 தொடருக்கு அத்தனை அணிகளும் ஜரூராக தயாராகிக் கொண்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் சும்மா இருக்குமா.. கேப்டன் தோனி தலைமையில் படு வேகமாக ரெடியாகி வருகிறது.

Recommended Video

தோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா ?

ரசிகர்களும் இந்த சீசனை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி விட்டனர். ஆர்வத்துடன் காத்துள்ளனர். மார்ச் 29ம் தேதி தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை சந்திக்கவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளுமே ஆயத்தமாகி வருகின்றன.

தீவிரப் பயிற்சியில் சிஎஸ்கே

தீவிரப் பயிற்சியில் சிஎஸ்கே

சென்னையில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் கேப்டன் தோனியும், இதர வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தோனியைக் காண ரசிகர்கள் குவிந்தபடி உள்ளனர். அதேபோல மற்ற வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை கப்பைத் தூக்காமல் விடக் கூடாது என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகவே உள்ளது.

கேப்டன் தோனிக்கு முக்கிய தொடர்

கேப்டன் தோனிக்கு முக்கிய தொடர்

அதை விட முக்கியமாக தோனிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. காரணம் இதில் அவர் விளையாடப் போவதை பொறுத்துதான் அவரது எதிர்காலமே உள்ளது. இதனால் அவர் தனிப்பட்ட முறையில் ஒரு கேப்டனாக, நல்ல பேட்ஸமேனாக, நல்ல விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட முனைவார். இதேபோலத்தான் சுரேஷ் ரெய்னா போன்ற மற்ற வீரர்களும்.

சுரேஷ் ரெய்னாவுக்கும் இது முக்கியம்

சுரேஷ் ரெய்னாவுக்கும் இது முக்கியம்

சில வீரர்கள் ஐபிஎல்லில் மட்டும் அசத்தலாக விளையாடுவார்கள். ரன் குவிப்பார்கள். விக்கெட்களை சாய்ப்பார்கள். அப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர்தான் முரளி விஜய். ஐபிஎல் போட்டிகளில் பல சாதனைகளை வைத்துள்ளார் முரளி விஜய். இடையில் வேறு அணிக்கு இடம் மாறியிருந்த முரளி விஜய், இந்த சீசனில் சென்னைக்கு ஆடுகிறார்.

விஜய் பாட்டை வைத்து டிவீட்

முரளி விஜய்யும், சுரேஷ் ரெய்னாவும் நேற்று நடந்த வலைப் பயிற்சியின்போது எடுத்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுக் கலாய்த்துள்ளது. அதில், Life is very short nanba, always be happy! என்று நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட சூப்பர் ஹிட் பாடல் வரியைப் போட்டு நல்லா சிரிங்க.. மஞ்சள் கலருக்கு விசில் போடுங்க என்றும் பன்ச் கொடுத்துள்ளது. சும்மா சொல்லக் கூடாதுங்க.. சுரேஷ் ரெய்னாவும் சரி, முரளி விஜய்யும் சரி ரொம்ப நல்லாவே சிரிச்சிருக்காங்க.

Story first published: Tuesday, March 10, 2020, 11:08 [IST]
Other articles published on Mar 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+