Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாவைப் போல் மகன்.. ராகுல் டிராவிட் ஷாட்டை அப்படியே அடித்த சமித் டிராவிட்.. மிரளும் ரசிகர்கள்!

பெங்களூர்: அரசியல் சினிமாவை போல் கிரிக்கெட் விளையாட்டிலும் வாரிசுகள் களமிறங்குவது இந்தியாவில் புதிதல்ல. ஏற்கனவே ரோஹன் கவாஸ்கர், ஸ்டூவர்ட் பின்னி என்று ஏராளமான வீரர்கள் இந்திய அணியில் விளையாடியுள்ள நிலையில், தற்போது அடுத்த தலைமுறை வீரர்களின் மகன்களும் விளையாட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட். கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மகாராஜா டி20 கிரிக்கெட் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான இவரை வாங்க சில அணிகள் விருப்பப்பட்டாலும், மைசூர் வாரியர்ஸ் அணி முந்திக் கொண்டது.

ipl 2025 Rahul Dravid Samit Dravid

நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து மைசூர் வாரியர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மைசூர் வாரியர்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனோஜ் பண்டாகே 33 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 58 ரன்களை விளாசினார். அதேபோல் ஹர்சில் தர்மானி 32 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

இதன்பின் களமிறங்கிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய புவன் ராஜு 24 பந்துகளில் 6 சிக்ஸ் உட்பட 51 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் பெங்களூர் அணியின் நவீன் வீசிய பந்தில் சமித் டிராவிட் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி அசத்தினார்.

7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினால், சமித் டிராவிட்டின் சிக்ஸ் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. நவீன் வீசிய பந்தில் அபாரமாக புல் ஷாட் மூலமாக டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை அடித்தார். இந்த ஷாட் அப்படியே ராகுல் டிராவிட்டின் புல் ஷாட் போலவே அமைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் முதல் போட்டியிலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இருப்பினும் அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். இதன் மூலமாக சமித் டிராவிட்டுக்கு ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, August 17, 2024, 15:09 [IST]
Other articles published on Aug 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+