Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சில விநாடிகள் தாமதிச்சு பந்தை போடறேன்.. பேட்ஸ்மேன் மனநிலை புரிஞ்சு அடிக்கிறேன்

ஷார்ஜா : ஆர்சிபியின் முக்கிய ஸ்பின்னராக மாறியுள்ளார் வாஷிங்டன் சுந்தர். மேலும் விராட் கோலியின் அபிமானத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் 4.90.

இந்நிலையில் பந்தை போடுவதற்கு முன்பாக சில வினாடிகள் தாமதித்து பௌலிங் செய்வதாகவும், இதற்குள் பேட்ஸ்மேனின் மனநிலை புரிந்துவிடும் என்றும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக பயன்படுத்தும் அணிகள்

சிறப்பாக பயன்படுத்தும் அணிகள்

ஐபிஎல் 2020 சீசனில் பல புதிய இளம் பௌலர்கள் மற்றும் ஸ்பின்னர்களின் வருகை உற்சாகத்தை அளித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற உத்வேகமும் பிறக்கிறது. ஐபிஎல்லின் 8 அணிகளும் இந்த வீரர்களை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றன.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுந்தர்

5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுந்தர்

இதில் முக்கியமானவராக கருதப்படுகிறார் ஆர்சிபியின் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தை சேர்ந்த இவர், இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் இவர். சுந்தரின் எகானமி ரேட் 4.90. ரஷீத் கானைவிட சில புள்ளிகளே (5.03) பின்தங்கியுள்ளார்.

விராட் கோலியின் தந்திரம்

விராட் கோலியின் தந்திரம்

மேலும் விராட் கோலியின் அபிமானத்தையும் பெற்றுள்ளார். இவரை அதிகமாக விராட் கோலி பவர்பிளே ஓவர்களில் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், தான் பந்தை போடும்போது சில வினாடிகள் தாமதித்து போடுவதாகவும் இதன்மூலம் பேட்ஸ்மேனின் மனநிலையை புரிந்து அதற்கேற்ப பௌலிங்கை போட முடிவதாகவும் சுந்தர் தன்னுடைய சக்சஸ் பார்முலாவை தெரிவித்துள்ளார்.

கேப்டனின் நம்பிக்கை

கேப்டனின் நம்பிக்கை

தன்னுடைய உயரம் தன்னுடைய சக்சசிற்கு முக்கிய காரணமாக விளங்குவதாகவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய உயரத்தை தான் தொடர்ந்து சரியாக பயன்படுத்தும் போது தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் கேப்டன் விராட் தன்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து செயல்படுவது சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 15, 2020, 8:32 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+